Aran Sei

மீண்டும் எழுப்பப்பட்ட ‘முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்’ – யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் திறப்பு

லங்கையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட ‘முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்’ மீண்டும் எழுப்பப்பட்டு, மாணவர்களால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நடந்த உள்நாட்டுப் போரின்போது, முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்காலில்ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழின மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை மாணவர்களின் எதிர்ப்பையும் மீறிச் சிங்கள அரசு கடந்த 08.01.2021 அன்று இடித்துத் தரை மட்டமாக்கியது.

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் – உரிமைக்காக ஒன்றிணைந்த தமிழர்களும் முஸ்லீம்களும்

இந்நிலையில், இதனைக் கண்டித்து ஏராளமான மாணவர்களும் உள்ளூர் மக்களும் அரசியல் தலைவர்களும் பல்கலைக்கழகம் முன்பு திரண்டு போராடத்தில் ஈடுபட்டனர்.

மேலும்  இதுகுறித்து, விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு : இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்ட வைகோ உட்பட 300 பேர் கைது

இதையடுத்து, முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை மீண்டும் அமைக்கப் பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்கி, கடந்த ஜனவரி 11-ம்  அன்று, அதே இடத்தில் புதிதாக நினைவு ஸ்தூபி அமைக்க அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு : இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்ட வைகோ உட்பட 300 பேர் கைது

இந்நிலையில், இதன் பணிகள் முடிவடைந்து தற்போது முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னம் நேற்று ஏப்ரல் 23 அன்று மாணவர்களால் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

SOURCE;BBC

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்