கறுப்பு பூஞ்சை நோய்க்கான அம்போடெரிஸின் பி போதிய அளவில் இருப்பு இல்லாததாலும், சிறப்பு மருத்துவர்கள் இல்லாததாலும், அந்நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வெகுதூரம் அல்லது வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீநகர் பகுதியைச் சார்ந்த மோஹட் மன்சூர் ஹுசைனின் மொத்தக் குடும்பமும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், கொரோனா பாதிப்பிலிருந்து தேறி அவர் மருத்துவமனையிலிருந்து வந்த 2 நாட்களுக்குப் பிறகு அவரது மனைவி இறந்ததாகவும் அந்த செய்தி கூறுகிறது.
இந்நிலையில், மன்சூர் ஹுசைனின் சில நாட்களிலேயே கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டதாகவும், இதன்காரணமாக டெல்லி,ஸ்ரீநகர் போன்ற பகுதிகளில் சிகிச்சைக்காக மருத்துவமனை தேடியும் கிடைக்காத நிலையில், மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள மருத்துவர் கவுதம் பன்சாலி, மும்பை மருத்துவமனையில் 27 கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும், அதில் 10 பேர் வெளி இடங்களில் இருந்து வந்தவர்கள் என்றும் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா : கொரோனாவிலிருந்து தப்பி ’கருப்பு பூஞ்சை தொற்று’க்கு பலியிலான 52 பேர்
இதேபோன்று, மும்பையில் உள்ள கே.இ.எம் மருத்துவமனையில் கறுப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவில் 60 படுக்கைகளில், வெளி இடங்களில் இருந்து எண்ணற்ற நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக துணை மருத்துவ அலுவலர் பிரவீன் பங்கர் கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு காது,மூக்கு,தொண்டை நிபுணர்,நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், கண் மருத்துவர் ,பொது அறுவை சிகிச்சை நிபுணர்,மயக்க மருந்து நிபுணர் ஆகியோரைக் கொண்ட சிறப்பு மருத்துவ வல்லுநர் குழுவும் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் கடந்த சில நாட்களாக சிகிச்சைபெற்று வந்த 100 பேரில் 30 அல்லது 40 பேர் கொரோனா தொற்றின் காரணமாக ஏற்படுகின்ற கறுப்பு பூஞ்சைத் தொற்றால் இறந்துள்ளதாகவும், கடந்த மே 22 வரை 8,848 பேர் கறுப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.