Aran Sei

விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை: சட்டப்பூர்வமாக்க விரைவில் குழு அமைக்கப்படுமென ஒன்றிய அரசு தகவல்

விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் பிரதிநிதிகளின் பெயர்கள் கிடைத்தவுடன் விவசாய விளைப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பாக ஒரு குழுவை அரசு விரைவில் அமைக்கும் என்று ஒன்றிய அரசின் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று (ஏப்ரல் 2) மாநிலங்களவையில் தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின் போது திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் எழுப்பியுள்ள கேள்விக்கு பதிலளித்த நரேந்திர சிங் தோமர், குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த குழுவை அமைப்பதில் ஒன்றிய அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

வாக்குறுதிகள் நிறைவேற்றாவிட்டால் விவசாயிகள் போராட்டம் தொடங்கும் – ஒன்றிய அரசை எச்சரித்த சம்யுக்த் கிசான் மோர்ச்சா

விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராடி வந்த நிலையில், அச்சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வமாக்குவது குறித்து ஆராய்ந்து, செயல்படுத்த ஒரு குழு அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை விவசாயிகளுக்கு அளித்தார்.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்