“ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி” அமைப்பை நிறுவிய, மக்பூல் பட்டின் 37வது நினைவு தினத்தையொட்டி, காஷ்மீரில் இன்று (பிப்ரவரி 11) முழு அடைப்பு நடைபெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் அழைப்பின் பெயரில் நடைபெற்ற முழு அடைப்பால், காஷ்மீரில் இயல்பான நடவடிக்கைகள் முடங்கியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
காஷ்மீர் அமெரிக்க தினம் – நியூயார்க் சட்டமன்றத்தில் நிறைவேறிய தீர்மானம்
ஸ்ரீநகரில், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள் அடைக்கப்பட்டிருந்ததாகவும், சாலைகளில் பொதுப் போக்குவரத்துக்கான வாகனங்கள் குறைவான எண்ணிக்கையிலேயே காணப்பட்டதகாவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், காஷ்மீரின் மற்ற மாவட்ட தலைநகரங்களிலும், இயல்பு வாழ்க்கை முடங்கியதாக தெரிவித்துள்ள தி இந்து, விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறுவதை தடுப்பதற்காக, அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்திய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில், தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட அஃப்சல் குருவின் நினைவு தினத்தை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி சார்பாக, கடந்த செவ்வாய்க் கிழமை (பிப்ரவரி 9), முழு அடைப்பு நடைபெற்றது.
காஷ்மீர் என்கவுன்டர் – நீதி வேண்டும் : போலீஸ் விளக்கத்தை மறுக்கும் இளம் காஷ்மீரிகளின் குடும்பத்தினர்
இந்த இரண்டு முழு அடைப்புகளுக்கும் ஆதரவாக, ஹூரியத் மாநாடு அமைப்பின் சார்பாக, ஸ்ரீநகரின் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாகவும், இருந்தபோதும் அவை அந்த அமைப்பின் சார்பாக ஒட்டப்பட்டதா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தி இந்து கூறுகிறது.
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும், காஷ்மீரை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கருதிய மக்பூல் பட், ஆயுதப் போராட்டம் மூலம் காஷ்மீர் விடுதலையை சாதிக்க முடியும் என்றும் நம்பினார்.
1976 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மக்பூல் பட், 1984ஆம் ஆண்டு, பிப்ரவரி 11ஆம் தேதி, டெல்லி திகார் சிறையில் தூக்கிடப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.