Aran Sei

விவசாயிகள் போராட்டத்திற்கு எதிர்கட்சிகள் ஒன்றினையாத வரை அரசுக்கு சாதகமாகவே அமையும் – ஹர்சிம்ரத் கவுர் பாதல்

வேளாண் சட்டங்களுக்கெதிரான விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டுமென சிரோமணி அகாலி தளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத்தலைவரை சந்தித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக  பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி  (JKNC)  கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்தித்துள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்துள்ள  ஹர்சிம்ரத் கவுர் பாதல், “விவசாயிகள் இறப்பு தொடர்பாக ஒன்றாக குரலெழுப்ப நான், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சியினரை சந்தித்தேன். ஆனால், வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் ஒருவரும் இதுகுறித்து அக்கறைக் கொள்ளவில்லை. எதிர்கட்சிகள் ஒன்றினையாத வரை அது அரசுக்கு சாதகமாகவே அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை ஏறத்தாழ 5௦௦ விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக  ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, “விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு நேரம் கொடுக்க அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க வேண்டுமென  நாங்கள் குடியரசுத் தலைவர் வலியுறுத்தினோம்.” என்று சிரோமணி அகாலி தளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் குறிப்பிட்டுள்ளார்.

source; the new indian express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்