Aran Sei

வீட்டின் எதிரே குப்பையைக் கொட்டுவதை தட்டிக்கேட்ட பட்டியல் சமூகத்தினர் மீது தாக்குதல் – வன்முறையில் ஈடுபட்டவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்த காவல்துறை

த்தியபிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில், தன் வீட்டின் எதிரே குப்பையைக் கொட்டிய ஆதிக்கச் சாதியினரை தட்டி கேட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

பட்டியல் சமூகத்தினரை காலில் விழ வைத்த கொடூரம் – வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 8 பேர் மீது வழக்கு

இந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட ஹரிநாத் சிங் மற்றும் அவரது மகன் சோபால் சிங் சோலங்கி ஆகியோர் அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஹரிநாத் சிங்கிற்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு,காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவரது மகன் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஆதிக்க சாதியை சேர்ந்த 6 பேர் மீது,பிரிவு 294 (ஆபாச செயல்கள் மற்றும் பாடல்களைப் பயன்படுத்துதல்), 323 (தானாக முன்வந்து புண்படுத்தியதற்கான தண்டனை) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 506 ( மிரட்டல்) மற்றும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளதாகவும் தி வயர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் – குற்றவாளியையே திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கும் நீதிமுறை

கடந்த ஜூன் 12 அன்று, ஆதிக்க சாதியைச் சார்ந்த நாராயண் சிங் செந்தவ், ராஜேந்திர சிங் மற்றும் விஜேந்திர சிங் ஆகியோர் ஹரிநாத் சிங்கின் வீட்டிற்கு வந்து, ஏன் தாங்கள் மாட்டு சாணத்தை கொட்டிவைக்கும் இடத்தில், செங்கற்கள் வைக்கப்பட்டிருக்கிறது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

இந்நிலையில், இதனால் ஆத்திரம் அடைந்த ஆதிக்க சாதியினர் இவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, கடுமையான ஆயுதங்களால் அவர்களையும்,அவர்களது குடும்பத்தையும் தாக்கியதாகவும் தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதமாற்ற தடைச் சட்டம்: மத்திய பிரதேசத்தில் பதியப்பட்ட முதல் வழக்கு

இதனால், காயமுற்ற அவர்கள் மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்த நிலையில், ஆதிக்க சாதியினர் அவர்களது வீட்டுக்குள் புகுந்து பாத்திரங்களை வெளியே வீசியுள்ளதாகவும், மின்சார இணைப்பைத் துண்டித்துள்ளதாகவும், மேலும், கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ஹரிநாத் சிங்கின் சகோதரர் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது, முதலில் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியவில்லை என்றும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் கொடுத்த அழுத்தத்திற்கு பின்னரே வழக்கு பதியப்பட்டதாகவும் ஹரிநாத் சிங்கின் சகோதரர் தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி தெரிவிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்