Aran Sei

மத்திய பிரதேசம்: இரண்டு பழங்குடிகளைக் கொன்ற பசுக் காவலர்கள்

த்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் பசுவை கொன்றதாக சந்தேகப்பட்டு இரு பழங்குடியினரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றுள்ளது. இச்சம்பவத்தில் மேலும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

15 முதல் 20 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த தொண்டர்கள் இருப்பதாக  காங்கிரஸ்  கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், மாநிலத்தில் ஆளும் கட்சியாக பாஜக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளிப் பாடத்திட்டத்தில் சமஸ்கிருதம், ராமர், பரசுராமர் – மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு

“இந்தச் சம்பவம் நேற்று(மே- 5) அதிகாலை 2:30 மணி முதல் அதிகாலை 3 மணி வரை நடந்துள்ளது. இது தொடர்பாக 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 6 பேர் மீது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது” என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுன் சிங் ககோடியா தலைமையிலான குழு ஜபல்பூர்-நாக்பூர் நெடுஞ்சாலையில் போராடியுள்ளது.

15 முதல் 20 பேர் கொண்ட குழு பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்குச் சென்று, அந்தப் பழங்குடியினர் ஒரு பசுவைக் கொன்றதாகக் குற்றம் சாட்டி அவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளார் மற்றுமொருவர் காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனை இன்னும் நடத்தப்படவில்லை,” என்று காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்.கே.மரவி பிடிஐயிடம் தெரிவித்துள்ளார் .

பஞ்சாப்: ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் புல்டோசரை சந்திக்க நேரிடும் – ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எச்சரிக்கை

கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருவதாக கூறப்படுகிறது. “மூன்று பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் சுமார் 12 கிலோ இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,” என்று எஸ்.கே.மரவி கூறியுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த பிரஜேஷ் பாட்டி கூறுகையில், சாகர் பகுதியைச் சேர்ந்த சம்பத் பாட்டி மற்றும் சிமாரியாவைச் சேர்ந்த தன்சா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தபோது ஒரு கும்பல்அவர்களை தடிகளால் தாக்கியதாகவும், அவரும் தாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்  ககோடியா கூறும்போது, “தாக்குதல் நடத்தியவர்கள் பஜ்ரங் தள் உறுப்பினர்கள்; வலதுசாரி அமைப்பை தடை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் ககோடியா வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

உ.பி: சனாதன தர்ம சபா நிகழ்வில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சு – நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அலிகார் மாவட்ட நிர்வாகம் நோட்டிஸ்

காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கமல்நாத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணையை அறிவிப்பதன் மூலம் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை நான் கோருகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும், அரசு செலவில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த சம்பவத்தில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர்”என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இந்திய அளவில் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களில் மத்தியப் பிரதேசம்தான் முதலில் இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிப்பதாக முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Source: thewire

திருமாவை அம்பேத்கரோடு ஒப்பிட்டது சரிதான் | சங்கத் தமிழன் நேர்காணல்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்