Aran Sei

விழுப்புரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க வேண்டும் – என்.எல்.சி நிறுவனத்துக்கு ரவிக்குமார் வேண்டுகோள்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சி.எஸ்.ஆர் (பெரு நிறுவனங்கள் சமூக நல பொறுப்பு) நிதியின்கீழ் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் அமைத்துத்தர வேண்டுமென, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் தலைவருக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின், விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

18 வயதிற்குமேல் மே 1 முதல் தடுப்பூசி: இரண்டு வாரத்தில் பெருந்தொற்று ஏற்படாதெபதற்கு என்ன உத்தரவாதம் – ரவிக்குமார் கேள்வி

இதுகுறித்து, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ராகேஷ் குமாருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை சுனாமி போன்று உயர்ந்து வருவதாகவும், இதன்காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தால் தூத்துக்குடி, சென்னை, நெய்வேலி ஆகிய பகுதிகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளதை வரவேற்பதாகவும், இதை போன்ற ஒன்றை சி.எஸ்.ஆர் நிதியின் கீழ் விழுப்புரத்திலும் அமைத்து தரவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

தேவியானந்தல் பகுதியில் கொலைசெய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு வி.சி.க நிதி உதவி -குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை துணைநிற்போமென உறுதி

இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சி.எஸ்.ஆர் நிதியின் கீழ், ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் அமைத்துத் தருக!” நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன (@nlcindialimited) தலைவருக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கடிதம்” என்று குறிப்பிட்டு அந்த கடிதத்தையும் இணைத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்