மத்திய பிரதேசத்தில் இருந்து கும்பமேளா சென்ற பக்தர்கள், அம்மாநிலத்திற்கு திரும்பியவுடன் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கங்கை நதிக்கரைகளில் நடைபெறும் கும்பமேளா விழா, உத்திரபிரதேச மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்று வருகிறது. ஒரு மாத காலம் நடைபெறும் இந்த விழாவில், கொரோனா பரவலையும் பொருட்படுத்தாது பல லட்சக்கணக்காணோர் கூடி வருகின்றனர்.
மேலும், இதில் பங்கேற்கும் பலர் கொரொனா தடுப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது போன்றவற்றை பின்பற்றுவதில்லை.
ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி, இதுவரை 2000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது.
ரெம்தேசிவிர் மருந்துகளை அவசரமாகக் கோரிய மகாராஷ்டிரா அரசு – அலட்சியமாகப் பதிலளித்த பிரதமர் அலுவலகம்
நேற்று (ஏப்ரல் 17), மத்திய பிரதேச அரசு வெளியிட்ட அறிவிப்பில், “ஹரித்வார் கும்பமேளாவில் இருந்து வீடு திரும்பும் அனைத்து பக்தர்களும் தங்கள் சொந்த நகரங்கள், கிராமங்களுக்குத் திரும்பிய உடன், கட்டாயமாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இவ்வறிவிப்பை, அம்மாநில உள்துறை அமைச்சகம் 53 மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளது.
அவ்வாறு திரும்பும் பக்தர்கள், தங்களை கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இதை அம்மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரித்வாரில் இருந்து திரும்பும் பக்தர்களைப் பற்றிய தகவலைப் பொறுப்புள்ள குடிமக்கள் யார் வேண்டுமானாலும், அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தலாம் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கும்பமேளா சென்று திரும்பும் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனக் கர்நாடக சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Source : New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.