Aran Sei

காதலியைச் சந்திக்கச்சென்ற இளைஞரை ஆணவக் கொலை செய்த பெண்வீட்டார் – நால்வரை கைது செய்த காவல்துறை

டெல்லியில்  பிராமணச் சமுகத்தைச் சார்ந்த தனது முன்னாள் காதலியைச் சந்திக்கச்சென்ற பிற்படுத்தப்பட்ட சமுகத்தைச் சார்ந்த  இளைஞரை, அப்பெண்ணின் குடும்பத்தினர் எரித்துக் கொலைசெய்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிராமணச் சமுகத்தைச் சார்ந்தப் பெண்ணான  சஞ்சல் ஷர்மாவும் , பிற்படுத்தப்பட்ட சமுகத்தைச் சார்ந்த இளைஞர் ராகுல் யாதவும் சில வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர்.

ஆனால்,  அவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,  கடந்த ஆண்டு  சஞ்சல் ஷர்மாவிற்கு வேறொருவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர்அவரது தாய்  வீட்டிற்கு திரும்பிய சஞ்சல்  ,  ராகுல் யாதவை தொலைபேசியின் வழியாக  அழைத்து, அவரது வீட்டிற்கு வருமாறும், கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என்றும்  கோரியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து,  ராகுல்  சஞ்சல் ஷர்மாவின்  வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் இந்தச் சம்பவம் நடந்தேறியுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள  ராகுல் யாதவின் உறவினர், “சஞ்சல் கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டுமென அழைக்கிறார். கடந்த மூன்று நாட்களாக தொலைபேசியில் அழைத்ததாகவும் கூறியிருந்தான். கடைசியாக ஒருமுறை சஞ்சலைப் பார்க்கச் சென்றிருந்த அவனை அவர்கள் கொன்றுவிடுவார்கள் என்று நினைக்கவில்லை” எனவும் கூறியுள்ளார்.

மேலும், இதுகுறித்து குறிப்பிட்டுள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அதுல் சிங், “குற்றம்சாட்டப்பட்டுள்ள ராகவேந்திரா, விஷ்ணு, சுபம் மற்றும் தீபக் ஆகிய நால்வர் யாதவின் கைகளைக் கட்டித் தாக்கியுள்ளனர். பின்னர் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாகப் பெண்ணின் குடும்பத்தைச் சார்ந்த அந்த  நால்வரையும் காவல்துறை கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Source: The wire 

 

 

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்