Aran Sei

ம.பி: பட்டியல் சமூகப் பெண்ணுக்கு கோவிலில் நுழைய அனுமதி மறுப்பு – பூசாரி கைது

த்தியப் பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலுக்குள் மஹாசிவராத்திரி அன்று பூஜை செய்ய முயன்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை நுழைய விடாமல் தடுத்ததாகக் கோவில் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

ம.பி: ஆர்டிஐயில் தகவல் கேட்ட பட்டியல் சமூகத்தவர்: ஆதிக்க சாதியினரால் அடித்து துன்புறுத்தப்பட்ட அவலம்

“ஹரிஜன் கோவிலுக்குள் நுழைய முடியாது. ஹரிஜன் வெளியில் இருந்து மட்டுமே பூஜை செய்ய முடியும். கோவிலின் உள்ளே சென்று பூஜை செய்ய அவர்களுக்கு உரிமை இல்லை” என்று கோவில் பூசாரி கூறியதாகத் தடுத்து நிறுத்தப்பட்ட பூஜா காண்டே கூறியுள்ளார்.

நாங்கள் பூஜை செய்யக்கூடாது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டுள்ளதா?. என்னை உள்ளே அனுமதிக்காவிட்டால் காவல்துறைக்கு தகவல் கொடுப்பேன் என்று பூஜா காண்டே கோவில் பூசாரியிடம் கூறியுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

குஜராத்தில் குதிரை ஏறியதற்காக தாக்கப்பட்ட தலித் மணமகன் – 28 பேர் மீது வழக்குப்பதிவு

இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 505 (இரு குழுக்களிடையே பகையை ஊக்குவிப்பது) மற்றும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கோவில் பூசாரி உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source : indianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்