Aran Sei

‘பண்டிட் நாதுராம் கோட்சே வாழ்க’ – காந்தி பிறந்தநாளில் கோட்சேவுக்கு மாலையிட்டு மரியாதை செய்த இந்து மகாசபை

Credit : https://www.patrika.com

காத்மா காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே ஆகியோரின் புகைப்படங்கள் இந்து மகாசபையின் கருத்தரங்கில் மாலை அணிவிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

நேற்று (அக்டோபர் 2), மகாத்மா காந்தியின் 152 வது பிறந்தநாள் விழாவை ஒட்டி, இந்து மகாசபையின் குவாலியர் மாவட்ட பிரிவு, ‘காந்தி மற்றும் தியாகிகள் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே’ என்ற தலைப்பில் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.

கருத்தரங்கிற்கு பிறகு,  செய்தியாளர்களிடம் பேசியுள்ள இந்து மகாசபையின் தேசிய துணைத் தலைவர் ஜெயவீர் பரத்வாஜ், “காந்தியுடன் எங்களுக்கு எதுவும் இல்லை. ஆனால், காந்தியும் முகமது அலி ஜின்னாவும்தான் நாட்டின் பிரிவினைக்கு காரணமாக இருந்தனர். இந்திய பிரிவினை மிகப்பெரிய இனப்படுகொலைக்கு வழிவகுத்தது. இந்துக்கள் பலர் கொல்லப்பட்டனர்.” என்று கூறியுள்ளார்.

‘கோட்சே’ பெயரில் கல்வி நிலையம்: எதிர்ப்பு வலுத்ததால் மூடிய இந்து மகாசபை

அதனால்தான் நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தேவும் காந்தி மற்றும் ஜின்னாவை கொல்ல முடிவு செய்தனர் என்றும் காந்தியைக் கொன்றால்தான், ​​அவர்களால் பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னாவை நெருங்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கருந்தரங்கு மேடையில் கோட்சே மற்றும் ஆப்தேவின் புகைப்படங்கள் மாலை அணிவிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. சில ஆதரவாளர்கள் ‘பண்டிட் நாதுராம் கோட்சே வாழ்க; நாராயண் ஆப்தே வாழ்க’ என்று முழக்கமிட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 10-ம் தேதியன்று மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில், நாதுராம் கோட்சேவின் பெயரில் நூலகத்துடன் கூடிய கல்வி நிலையத்தை மத்தியப் பிரதேச மாநில இந்து மகாசபை தொடங்கியிருந்தது.

’கோட்சே’ பெயரில் கல்வி நிலையம் – ’இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை’ குறித்து கற்பிக்க இந்து மகாசபை திட்டம்

தேசத்தந்தை மகாத்மா காந்தியைக் கொலை செய்த கோட்சேவின் பெயர் கல்வி நிலையத்திற்கு சூட்டப்பட்டிருப்பதாகக் கூறி இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, கல்வி நிலையத்தை மூடுவதாக குவாலியர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

அதற்கு முன்னர், 2017 ஆம் ஆண்டு, அதே இந்து மகாசபை குவாலியர் மாவட்ட அலுவலகத்தில், கோட்சேவின் மார்பளவு சிலையை நிறுவியது. அச்சிலையை மாவட நிர்வாகம் அகற்றியது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்