Aran Sei

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ குறித்து ட்வீட் செய்த ஐஏஎஸ் அதிகாரி –நோட்டீஸ் அனுப்பிய மத்திய பிரதேச அரசு

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்த ஐஏஎஸ் அதிகாரி நியாஸ் கானின் ட்வீட்கள் வெறுப்பை பரப்புவதாகவும், ஐஏஎஸ் விதிகளை மீறியதாகவும் குற்றஞ்சாட்டி, அவருக்கு மத்தியப் பிரதேச மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நேற்று (மார்ச் 24), ஐஏஎஸ் அதிகாரி நியாஸ் கானுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில், ட்வீட்களுக்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

அம்மாநில பொதுப்பணித் துறையின் துணைச் செயலாளரான நியாஸ் கான், தனக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதை உறுதிசெய்துள்ளதோடு, தான் ஏழு நாட்களுக்குள் அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் போல இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதையும் படமாக்க வேண்டும் – ஐஏஎஸ் அதிகாரியின் ட்விட்டுக்கு நடவடிக்கை எடுக்க கோரும் பாஜக

எனினும், அந்நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து கருத்து தெரிவிக்க நியாஸ் கான் மறுத்துள்ளார்.

அண்மையில், தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஏஎஸ் அதிகாரி நியாஸ் கான், “தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பிராமணர்களின் வலியைக் காட்டுகிறது. அனைத்து மரியாதையுடன் பாதுகாப்பாக காஷ்மீரில் வாழ அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். பல மாநிலங்களில் ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதைக் காட்ட அந்த தயாரிப்பாளர் ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும். இஸ்லாமியர்கள் பூச்சிகள் அல்ல. அவர்களும் மனிதர்கள். நம் நாட்டின் குடிமக்கள்” என்று ட்வீட் செய்திருந்தார்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமும் பிரதமர் மோடியும் – அ.மார்க்ஸ்

மேலும், மற்றொரு ட்வீட்டில், “பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் படுகொலைகளை காட்ட ஒரு புத்தகம் எழுத நினைத்தேன். அதை வைத்து, காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற ஒரு திரைப்படத்தை சில தயாரிப்பாளர்கள் தயாரித்து, சிறுபான்மையினரின் வலியையும் வேதனையையும் அனைத்து இந்தியர்களுக்கும் காட்ட முடியும் என நினைக்கிறேன்” என்று நியாஸ் கான் குறிப்பிட்டிருந்தார்.

நியாஸ் கானி ட்வீட்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்த பாஜகவின் மாநிலச் செயலாளர் ரஜ்னீஷ் அகர்வால், “நியாஸ் கானின் செயற்பாடுகளை மாநில அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு, அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது” என்று வலியுறுத்தி இருந்தார்.

‘குஜராத் ஃபைல்ஸ் என்ற பெயரில் படமெடுத்தால் வெளியிட அனுமதிப்பீரா?’ – பிரதமருக்கு பாலிவுட் இயக்குநர் வினோத் காப்ரி கேள்வி

இதுகுறித்து, நேற்று முன்தினம் (மார்ச் 23), செய்தியாளர்களிடம் பேசிய மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நிரோத்தம் மிஸ்ரா, “நியாஸ் கானின் ட்விட்டர் பதிவுகளைப் பார்த்தேன். அது ஒரு முக்கியமான பிரச்னை. அரசு அதிகாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வரம்பை அவர் மீறுகிறார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு அவருக்கு மாநில அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

Source: The New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்