Aran Sei

மத்தியப் பிரதேசம்: ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் – வீடுகள், வாகனங்கள் எரிக்கப்பட்டதால் ஊரடங்கு உத்தரவிட்ட அரசு நிர்வாகம்

த்தியப் பிரதேசத்தின் கர்கோன் நகரில் நடந்த ராம நவமி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கல் வீச்சைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் வாகனங்களும் வீடுகளும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, அந்நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று (ஏப்ரல் 10) நடந்த இந்த சம்பவத்தில், கலவர நிலைமையை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நேற்று இரவும் இன்றும் கர்கோன் நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கர்கோன் ஆட்சியர் அனுக்ரா பி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியரின் கடையை தாக்கிய ஸ்ரீராம சேனை: ‘கன்னடர்களை பாஜக தலைகுனிய வைக்கிறது’ – சித்தராமையா

மருத்துவ அவசரத்திற்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேறுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றும் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

கர்கோன் சம்பவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் செய்திகள் மற்றும் காணொளிக்களை சமூக ஊடகங்களில் பகிர்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கர்கோன் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

இச்சம்பவத்தில், கர்கோன் காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் சவுத்ரி மற்றும் இரண்டு காவலர்கள் காயமடைந்துள்ளனர்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்