அக்டோபர் 13 ஆம் தேதி மத்தியபிரதேச மாநிலம் பர்பானி மாவட்டம் சென்த்வா பகுதியில் கர்மா மைதானத்திற்குள் இஸ்லாமிய சிறுவன் நுழைந்ததால் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, அந்த பகுதியில் ஊரடங்கு விதிக்கப்பட்டு, 22 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநில எல்லையில் அமைந்துள்ள சென்த்வா பகுதி வகுப்புவாத கலவரங்கள் அதிகம் நடைபெற்ற பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
மோதிப் பாக் பகுதியில் கர்பா மைதானத்தில் ஒரு இஸ்லாமிய சிறுவன் காணப்பட்டதால் தகராறு ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
”சிறுவனின் குடும்பத்துடன் ஏற்கனவே தகராறில் ஈடுபட்டிருந்த இந்து இளைஞர் இதற்கு ஆட்சேபனை தெரிவித்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. பெரியவர்கள் ஈடுபட்டதால் வாக்குவாதம் சண்டையில் முடிந்துள்ளது. இதில் கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.” என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
”சிறுவர்களிடையே ஏற்பட்ட அற்பமான ஒரு சண்டை ஒரு வகுப்புவாத கலவரமாக மாறியது. இரு தரப்பினரும் நேருக்கு நேர் கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இதில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளனர்.” என பர்வானி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சுக்லா கூறியுள்ளார்.
இரண்டு சமூகங்களுக்கிடையே உள்ள நம்பிக்கையின்மை இருப்பதாக தெரிவித்த அதிகாரிகள், கல்வீச்சு சம்பவம்குறித்து காட்டுத்தீ போல பரவிய வாட்சப் வதந்திகள் இரு சமுகங்களையும் எதிரெதிராக நிறுத்தியது என தெரிவித்துள்ளனர்.
பண்டிகை காலம் மற்றும் வதந்திகள் பரவுதல் காரணமாக அந்தப் பகுதியில் அடுத்த ஒரு நாள் ஊரடங்கு விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்ததது.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.