Aran Sei

‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்

யோத்தியில் ராமர் கோவில் கட்ட ஏற்படுத்தப்பட்ட ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டதாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாநில காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவானது, கோவில் கட்டுவதற்கு நிலம் வாங்குவதில் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது.

மேலும், இதுகுறித்து, ஒன்றிய புலனாய்வுப் பிரிவு மற்றும் அமலாக்க இயக்குனரகம், விசாரணை நடத்த வேண்டுமெனவும் கோரியுள்ளது.

‘ராமா.. உன் பெயரில் ஊழலா?’ – அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியதில் ஊழலென காங்கிரஸ் வேதனை

கடந்த மார்ச் 18 அன்று மாலை 7.10 மணியளவில், 5.8 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்கள், 2 கோடி ரூபாய்க்கு வாங்கியதாகவும், அடுத்த 5-10 நிமிடங்களிலேயே ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா என்ற கோவில் கட்டுமானப்பணியில் ஈடுபடும் குழுவானது, அதே நிலத்தை 18.5 கோடி வாங்கியுள்ளதாகவும் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அயோத்தி பவன் பாண்டே மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோர்  வெவ்வேறு பத்திரிகையாளர் சந்திப்புகளில் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளரும் மிஸ்ரா, நேற்று (ஜூன் 14) இரவு இந்தூரில் உள்ள சத்ரிபுரா காவல் நிலையத்தில், ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த் க்ஷேத்ரா மீது புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

‘ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கிய ஊழலில் பாஜகவினருக்கும் தொடர்புள்ளது’ – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மிஸ்ரா, “ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரிகள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்திற்காக நிலம் வாங்கும்போது தோராயமாக ரூ .16 கோடிவரை முறைகேடு செய்துள்ளனர். இந்த குற்றச்செயல் புரிந்ததற்காக, அறக்கட்டளையின் அதிகாரிகள்மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நம்பிக்கை மீறல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Source: pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்