Aran Sei

இந்தி மொழியில் மருத்துவக் கல்வி – மத்தியப் பிரதேசம் அறிவிப்பு

ந்தியாவிலேயே இந்தி மொழியில் மருத்துவக் கல்வியை வழங்கும் முதல் மாநிலமாக பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம் ஆகவுள்ளது.

இது தொடர்பாக, நேற்று (மார்ச் 27), அம்மாநில தலைநகர் போபாலில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், “இந்த ஆண்டு முதல் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இளநிலை மருத்துவ படிப்பு (எம்பிபிஎஸ்) இந்தி மொழியில் கற்பிக்கப்படவுள்ளது. இப்படிப்பை இந்தியில் வழங்கும் முதல் மாநிலம் மத்தியப் பிரதேசம் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.

`எங்களுக்கு இந்தி மொழியில் கடிதம் எதற்கு’ – சு.வெங்கடேசன் கேள்வி

“அதற்காக இந்தி மொழியில் புத்தகங்கள் தயாராகி வருகின்றன. இந்த ஆண்டு முதல் இந்தி மொழியில் மருத்துவப் படிப்பு தொடங்கப்படும். அதைத் தொடர்ந்து, இதே போன்று இந்தி மொழியில் பொறியியல் கல்வியும் மற்ற தொழில் படிப்புகளும் தொடங்கப்படும். மற்ற நாடுகள் தொழில் கல்விக்கு தங்கள் தாய்மொழியை  பயன்படுத்தும்போது நாம் ஏன் ஆங்கிலத்திற்கு அடிமையாக இருக்க வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிராமங்கள் மற்றும் நகரங்களில் இந்தி பேசும் பின்னணியில் இருந்து வரும் நடுத்தர மற்றும் ஏழை மக்களிடையே உள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்க இந்த புதிய நடைமுறை உதவும் என்று சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்