Aran Sei

‘தற்போதைய பணவீக்கத்திற்கு 1947-ல் நேரு ஆற்றிய உரையே காரணம்’ – ம.பி. பாஜக அமைச்சர்

1947 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரையின் தவறுகளால்தான் நம் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துள்ளது என்று பாஜக ஆளும் மத்திய பிரதேச மருத்துவ கல்வித்துறை அமைச்சர் விஸ்வாஸ் சாரங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று (ஜூலை 31), மத்திய பிரதேச தலைநகர் போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய விஸ்வாஸ் சாரங், “நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் பொருளாதாரத்தை முடக்கி பணவீக்கத்தை அதிகரித்த பெருமை நேரு குடும்பத்தைதான் சேரும். பணவீக்கம் ஓரிரு நாளில் உயர்ந்தது அல்ல. நாட்டின் பொருளாதார அடித்தளம் ஓரிரு நாளில் அமைக்கப்படவில்லை. 1947 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரையின் தவறுகளால்தான் நம் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துள்ளது.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

நரேந்திர மோடியின் அரசாங்கம் கடந்த ஏழு ஆண்டுகளில் பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளது என்றும் பாஜக ஆட்சியில் பணவீக்கம் குறைந்துள்ளதோடு, மக்களின் வருமானமும் அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்