Aran Sei

‘பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களுக்கு பிறந்த குழந்தைகள் நாடு திரும்பலாம்’ – இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தம்

பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு அந்நாட்டு அதிகாரிகள் வழங்கிய பிறப்புச் சான்றிதழ்களைக் கொண்டு, தங்கள் பெற்றோருடன் இந்தியா திரும்புவதற்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

இரு நாடுகளுக்கிடையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் குடியுரிமை பிறப்பால் மட்டும் வழங்கப்படுவதில்லை, மாறாக அக்குழந்தை பிறந்த ஆண்டு, பெற்றோரின் சூழலையும் கருத்தில் கொண்டே வழங்கப்படுகிறது.

பிரிட்டன் அதிகாரிகளால் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று அடையாளம் காணப்பட்டு, நாடு திரும்ப அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, அந்த நபர் உண்மையிலேயே ஒரு இந்திய குடிமகனா என்பதை உறுதி செய்ய இந்திய அரசு அதிகாரிகளால் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவர்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை – உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைக்கும் பிரிட்டன்

மேலும், “இந்தியாவில் ஆவண மோசடிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிபுணர்களைப் பயிற்றுவிப்பதற்கும், அது தொடர்பான சாதனங்களை வழங்குவதற்கும் பிரிட்டன் உதவும்.” என்று இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் அரசின் முந்தைய கணக்கின்படி, அந்நாட்டில் சட்டவிரோதமாக நுழைந்த அல்லது தங்கள் விசா காலத்தை கடந்து அங்கு குடியிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது என்று தெரிவித்திருந்தது. அதை மறுத்த இந்திய அரசு தரப்பு, இந்த எண்ணிக்கை இரண்டாயிரத்திற்கு மேல் இல்லை என்று தெரிவித்திருந்தது.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்