Aran Sei

பத்திரிக்கையாளர் சித்திக் காப்பானின் தாயார் மரணம் – உடல்நலக் குறைவால் மரணம்

Image Credits: India Legal

த்தரபிரதேச அரசால், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள, கேரளா பத்திரிக்கையாளர் சித்திக் காப்பானின் தாயார் கதீஜா குட்டி உயிரிழந்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

‘சித்திக் காப்பானை டெல்லி மருத்துவமனைக்கு மாற்றுங்கள்’ – உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

91 வயதுடைய கதீஜா குட்டி , உடல்நலக் குறைவினால் அவரது சொந்த ஊரான வெங்கரா பகுதியில் உயிரிழந்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம், மரணப்படுக்கையில் இருக்கும் தன் தாயை சந்திக்க கோரி பத்திரிகையாளர் சித்திக் காப்பான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், உச்ச நீதிமன்றம் அவருக்கு ஐந்து நாட்கள் பிணை வழங்கி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சித்திக் காப்பான் மரணமடைய நேரிடும் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ள சித்திக்கின் மனைவி

டெல்லியில் உள்ள மலையாள செய்தி இணையதளத்தில் செய்தியாளராகப் பணிபுரிந்து வந்த சித்திக் காப்பான், கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி, ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு சம்பவத்தைப் பற்றி தகவல் சேகரிப்பதற்காக, உத்தர பிரதேச மாநிலத்துக்குச் சென்றார். அவரை ஹத்ராசுக்குள் நுழைய விடாமல் வழிமறித்த காவல்துறையினர், ”பொது அமைதிக்கு குந்தகம்” விளைவிப்பதாகக் கூறி அவரைக் கைது செய்தனர்.

மேலும், அவருடன் செய்தி சேகரிக்க சென்ற சக ஊழியர்களான அதிக் உர் ரஹ்மான், மசூத் அகமது, ஆலம் ஆகியோரும்சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்