Aran Sei

அம்மா உணவகங்களில் ஆட்குறைப்பு செய்வதாக குற்றச்சாட்டு – அண்ணா அறிவாலயம் முன் ஊழியர்கள் போராட்டம்

அம்மா உணவகத்தில் பணியாற்றிவரும் ஊழியர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது என வலியுறுத்தி சென்னையில் உள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயம் அருகே அம்மா உணவக ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் பணியாற்றக்கூடிய அம்மா உணவக ஊழியர்களைப் பணியிடை நீக்கம் செய்துள்ளது. ஒரு அம்மா உணவகத்தில் 12 பேர் பணியாற்றினால் அதில் 6 நபர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்ற ஒரு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக உணவக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில். கோரிக்கையைக் கடிதம் மூலமாக தெரிவிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டதால் கடிதம் கொடுத்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் கட்சி பணியை மேற்கொள்வதற்காக அண்ணா அறிவாலயம் வருவதால் அம்மா உணவக ஊழியர்கள் காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 12 பேர் பணியாற்றும் அம்மா உணவகத்தில் 6 நபர்களும் 8 பேர் இருக்கக்கூடிய அம்மா உணவகத்தில் 4 நபர்கள்  மட்டுமே பணியாற்ற வேண்டும். மாறாக எல்லோரும் பணியாற்றினால் மற்றவர்களுக்கு ஊதியம் தர முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்மா உணவக ஊழியர்களின் கோரிக்கையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசீலிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்