Aran Sei

2010-2020 இல் பதிவான அதிக தேசத்துரோக வழக்குகள்: பீகார் முதலிடம், தமிழ்நாடு 2-ம் இடம், உ.பி 3-ம் இடம்

தேசத்துரோகச் சட்டத்தை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி அதிகப்படியான தேசத்துரோக வழக்குகள் பதிவாகும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் 2010 முதல் 2020 வரை அதிகமான தேசத்துரோக வழக்குகள் பதிவான மாநிலங்களில் 168 வழக்குகளுடன் பீகார் முதலிடத்தில் உள்ளது. 139 தேசத்துரோக வழக்குகளுடன் தமிழ்நாடு இரண்டாம் இடம், 115 தேசத்துரோக வழக்குகளுடன் உத்தரபிரதேசம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

அரசுக்கு எதிராக சதி செய்தல், அரசுக்கு எதிரான குறை செயல்களில் ஈடுபடுதல் ஆகியவற்றிற்கு எதிராக தேசத்துரோக சட்டம் 124,124ஏ பயன்படுத்தப்படுகிறது.

ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை தேசத் துரோக சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய இடைக்காலத் தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு

2010 முதல் 2021 வரை அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கங்களை விமர்சித்ததற்காக 405 பேர் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் 96 விழுக்காடு (388 வழக்குகள்) 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு, அதாவது பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஆர்டிக்கள் 14 என்ற ஆய்வு அமைப்பு துவங்கிய ‘A Decade of Darkness’ என்ற வலைத்தளம் தெரிவித்துள்ளது.

அதில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்தற்காக 149 பேர் மீது தேசத்துரோக வழக்குகளும், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்தற்காக 144 பேர் மீது தேசத்துரோக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அர்பன் நக்சல்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்கிறோம் – பாஜக எம்.பி., நித்யானந்த் ராய்

காங்கிரஸ் ஆட்சியிலிருந்த 2010 மற்றும் 2014 க்கு இடையில் பதிவு செய்யப்பட்ட தேசத்துரோக வழக்குகளின் வருடாந்திர சராசரியுடன் ஒப்பிடும்போது, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2014 மற்றும் 2020 க்கு இடையில் ஒவ்வொரு ஆண்டும் பதிவு செய்யப்பட்ட தேசத்துரோக வழக்குகளின் எண்ணிக்கையில் 28 விழுக்காடு அதிகரித்துள்ளது.

பாஜக ஆட்சிக்கு வந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து பெண்கள் மீது போடப்படும் தேசத்துரோக வழக்குகளின் எண்ணிக்கை 190 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு ‘தேச விரோத’மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவான சமூக வலைத்தள பதிவிற்காக 105 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே காங்கிரஸ் ஆட்சியிலிருந்த 2010 -1014 க்கு இடையில் இது தொடர்பாக ஒரு வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

பாஜக ஆட்சியில் உள்ள 2014 மற்றும் 2021க்கு இடையில் பதிவு செய்யப்பட்ட 519 தேசத்துரோக வழக்குகளில் பெரும்பாலானவை பத்திரிகையாளர்கள், அறிவுஜீவிகளுக்கு, அரசுக்கு எதிரான போராட்ட இயக்கங்களுக்கு எதிராகப் போடப்பட்டுள்ளது.

சட்டத்தைக் கொண்டு எளிய மனிதர்களை வதைக்கும் அரசு – செயற்பாட்டாளர் எறேன்றோ லைசோம்பம் நேர்காணல்

2016 மற்றும் 2019க்கு இடையில், தேசத்துரோக வழக்குகளின் எண்ணிக்கை 160 சதவீதம் (93 வழக்குகள்) அதிகரித்துள்ளது. ஆனால் 2019 ஆம் ஆண்டில் இந்த வழக்குகளுக்கான தண்டனை விகிதம் வெறும் 3.3 சதவீதமாக இருந்தது. அதாவது குற்றம் சாட்டப்பட்ட 93 பேரில் இருவர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலங்கள் தேசத்துரோக வழக்குகளின் எண்ணிக்கை (2010-2020)
1.   பீகார் 168
2.   தமிழ்நாடு 139
3.   உத்தரப் பிரதேசம் 115
4.   ஜார்க்கண்ட் 62
5.   கர்நாடகா 50
6.   ஒடிசா 30
7.   ஹரியானா 29
8.   ஜம்மு & காஷ்மீர் 26
9.   மேற்கு வங்கம் 22
10.  பஞ்சாப் 21

Source : indiatoday, theleaflet

பிரியாணி தடை திமுக ஆட்சியை முடக்கும் சதி | Sangathamizhan Interview

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்