Aran Sei

மசூதியைச் சேதப்படுத்திய இந்து அமைப்பினர் : ‘தவறாக வழிநடத்தப்பட்ட மனிதர்களை சரி செய்யுங்கள்’ – அசாதுதீன் ஓவைசி

மத்திய பிரதேச மாநிலத்தில், ராமர் கோயில் கட்டுவதற்காக நிதி கேட்டு இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பேரணி சென்ற இந்து அமைப்புகளால் கலவரம் வெடித்துள்ளது.

முன்னதாக, கடந்த டிசம்பர் 27 அன்று உஜ்ஜெயினுக்கு அருகிலுள்ள இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியான பேகும்பாக் பகுதியில் பாரதிய ஜனதாவின் யுவ மோர்ச்சாவால் நடத்தப்பட்ட பேரணி கல்வீச்சில் முடிந்தது.

முசாபர்நகர் கலவரம்: பாஜக தலைவர்கள் மீதான வழக்கு – வாபஸ் பெற முயலும் ஆதித்யநாத் அரசு

இந்நிலையில் இன்று சந்தன்கேதி கிராமத்தில் பேரணியாகச் சென்ற பாரதிய ஜனதாவின் யுவ மோர்ச்சா அமைப்பினர் 200 பேர் மசூதியை சுற்றி வளைத்து கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.

டெல்லி கலவரம் – கொலை குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் – டெல்லி நீதிமன்றம்

மேலும் சிலர் காவி கொடிகளை ஏந்தியபடி ஜெய் ஸ்ரீராம் எனும் முழக்கங்கள் எழுப்பியவாறு மசூதியை சேதப்படுத்தி அதன் உச்சிக்கு ஏறியுள்ளனர். மசூதியில் இருந்த கொடியை அகற்றிவிட்டு காவி கொடியை ஏற்ற முயற்சி செய்துள்ளனர். இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமியர்களின் வீடுகளை வாகனங்களை கொளுத்தும் காட்சி, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக “இரு தரப்பிலும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மசூதியின் மீது ஏறியவர்கள் யாரென்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதியப்படும்” என காவல்துறை ஆய்வாளர் யோகேஷ் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

டெல்லி கலவரம் – பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் கதைகள்

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆரிஃப் மசூத் “கொரோனா பெருந்தொற்றால் சட்டமன்றம் கூடுவதற்கு அனுமதி இல்லாமல் இருக்கும்போது பேரணிகள் செல்வதற்கு அனுமதி வழங்கியது யார்” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அகில இந்திய மஜ்லிஸ் இ இதிஹதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி “இந்த நாட்டில் பெரும்பான்மைவாதம் எவ்வளவு தூரம் தீவிரமடைந்துள்ளது என்பதை பாருங்கள். அவர்கள் மசூதிக்களை சேதப்படுத்டும் போதுதான் பெருமையையும் நிம்மதியையும் அடைகிறார்கள். சமீபத்தில்தான் பிரதமர் போராட்டக்காரர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தினார். இதுபோன்று தவறாக வழிநடத்தப்பட்ட்ட் மனிதர்களை சரி செய்ய அரசு விரைவில் ஏதாவது செய்ய வேண்டும்” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்