Aran Sei

டெல்லி கலவரத்தில் தாக்கபட்ட மசூதி – காவல்துறை விசாரணை அவசர கதியில் செய்யப்பட்டதாக நீதிமன்றம் குற்றச்சாட்டு

டந்த ஆண்டு பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தின்போது எரிக்கப்பட்ட மசூதி தொடர்பான விசாரணையில், டெல்லி காவல்துறை அவசர கதியிலும், கடுமையாகவும் நடந்து கொண்டதாக டெல்லி நீதிமன்றம் குற்றம்சாட்டியிருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வழக்கின் கடந்த விசாரணையின்போது, மசூதி எரிக்கப்பட்டது தொடர்பாகப் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் படி மேற்கொள்ளப்பட்ட தினசரி நடவடிக்கை ஆவணம், விசாரணை அறிக்கை ஆகியவற்றை தாக்கல் செய்யுமாறு டெல்லி காவல்துறைக்கு கூடுதல் அமர்வு நீதிபதி வினோத் யாதவ் உத்தரவிட்டிருந்தார்.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று : எல்லைகளை மூடிய நியூசிலாந்து

புகாரை ஏன் முறையாக விசாரிக்கவில்லை என நீதிபதியின் கேள்விக்கு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக வழக்கின் விசாரணை அதிகாரியான கால்துறை துணை ஆய்வாளர் சுமன் பதிலளித்துள்ளதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

தொற்று இல்லாதபோது என்ன செய்தீர்கள்? ஏன் தினசரி குறிப்புகளை எழுதவில்லை?. புகார்குறித்து என்ன விசாரனை நடத்தியுள்ளீர்கள்?. யாரை எல்லாம் விசாரித்துள்ளீர்கள்?.”என நீதிபதி கேள்விகளை எழுப்பியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பிலும் இணை பிரியாத நண்பர்கள் – அரியலூரில் இஸ்லாமிய-இந்து குடும்பங்களின் நல்லிணக்கம்

”புகார் தொடர்பாக எதையும் செய்யவில்லை” என சுமன் பதிலளித்ததை தொடர்ந்து, ”இது தொடர்பாக காவல்துறை ஆணையருக்கு எழுதலாமா? கலவரம் தொடர்பாக ஒருவரின் மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நமது அதிகாரிகள் விசாரணை தேவையில்லை என முடிவெடுத்துவிட்டனர்” என நீதிபதி கூறியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

நீதிபதியிடம் காவல்துறை ஆய்வாளர் சுமன் மன்னிப்பு கோரினார், அதற்கு நீதிபதி, “எத்தனை நாட்களுக்குப் புகார்தாரர் சிறையில் இருந்துள்ளார்?. இதற்கு யார் பதில் சொல்வார்கள்” என கேள்வி எழுப்பியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மசூதி எரிக்கப்பட்டது தொடர்பாகப் புகார் அளித்த ஹசீம் அலியை வேறொரு புகாரில் காவல்துறை கைது செய்தது. உள்ளூர் புகாரில் ஹசீம் அலி கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அது குற்றப்பத்திரிக்கையின் ஒரு பகுதி எனவும் காவல்துறை தெரிவித்திருந்தது.

” சட்டப் பேரவையை நோக்கிய ரிக்‌ஷா பயணம் ” – வங்காளத்தின் ஆன்மாவை பாதுகாக்க களத்தில் இறங்கிய எழுத்தாளர்

இருப்பினரும் ஒரு ஆண்டிற்கு பிறகு ஹசீமின் புகார் தொடர்பாகத் தனியாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் காவல்துறையினர் தெரிவித்தனர். முதல் தகவல் அறிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்த தினசரி  நடவடிக்கைகள் நகல் மற்றும் விசாரணை நிலை அறிக்கையைச் சமர்பிக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்து.

நீதிமன்ற உத்தரவை ஏற்று காவல்துறை சமர்ப்பித்த ஆவணங்களின்படி காவல்துறை புகாரைச் சரியாக விசாரிக்கவில்லை. மேலும், காவல்துறையின் மோசமான நடவடிக்கையை இது காட்டுகிறது என நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

விவசாயிகள் போராட்டம் – கட்சியிலிருந்து இருந்து விலகிய உத்தரபிரதேச பாஜகவின் பெண் தலைவர்

ஹஷிம் அலி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் எம்.ஆர்.ஷம்ஷாத், ”குறிப்பிட்ட ஒரு புகாரை வேறொரு புகாருடன் இணைத்ததால், அது அர்த்தமற்றதாகி விட்டது. எனவே, மசூதிக்குத் தீ வைக்கப்பட்டது தொடர்பாக தனியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என கோரியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்