Aran Sei

உக்ரைன் போர்: ‘கிவ்வில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய மாணவர் ஒருவருக்கு காயம்’ – ஒன்றிய அரசு தகவல்

க்ரைன் தலைநகர் கிவ்வில் இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்துள்ளதாக ஒன்றிய அரசின் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றும் பணிகள் தொடர்பாக வி.கே.சிங் தற்போது போலந்து நாட்டில் உள்ளார்.

இந்நிலையில், இன்று (மார்ச் 4), செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள வி.கே.சிங், “கீவில் இருந்து வெளியேறிக்கொண்டிருந்த இந்திய மாணவர் ஒருவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. காயம்பட்ட மாணவர் மீண்டும் கிவ்விற்கே அழைத்துச் செல்லப்பட்டார். போர் தாக்குதல்களின்போது இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்” என்று கூறியுள்ளார்.

உக்ரைன் போர்: ‘நவீனின் உடலுக்கு பதிலாக 10 பேரை விமானத்தில் கொண்டுவரலாம்’ –பாஜக எம்எல்ஏ

மார்ச் 1 அன்று, இந்திய மருத்துவ மாணவரான கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் எஸ்ஜி, உக்ரைனின் கார்கிவ் நகரில் தனக்கும் சக மாணவர்களுக்கும் உணவு வாங்கச் சென்றபோது ரஷ்ய இராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ரஷ்ய இராணுவ தாக்குதலின் காரணமாக உக்ரைன் வான்வெளி பிப்ரவரி 24ஆம் தேதியில் இருந்து மூடப்பட்டதால், உக்ரைனின் மேற்கு அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி மற்றும் போலாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா தனது குடிமக்களை சிறப்பு விமானங்கள் வழியாக வெளியேற்றி வருகிறது.

Source: PTI

தொடர்புடைய பதிவுகள்:

உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 1

உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 2

உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 3

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்