Aran Sei

சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் அளிக்காத மாநில அரசுகள் – விசாரணையின்றி கிடப்பில் இருக்கும் ரூ.  21 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்குகள்

Credit: The Hindu

டந்த மூன்று ஆண்டுகளாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள  ஐந்து மாநில அரசுகள் ஒப்புதல் அளிக்காததால், ரூ 21 ஆயிரம் கோடிக்கு மேல் மதிப்பிலான வங்கி மோசடி வழக்குகள் விசாரணையின்றி கிடப்பில் இருப்பதாக ஒன்றிய அரசின் பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

மிசோரம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா, ஜார்க்கண்ட், பஞ்சாப், மேகாலயா ஆகிய 9 மாநிலங்கள் வழக்குகளை விசாரிக்க சிபிஐக்கு அளித்த பொதுவான ஒப்புதலை திரும்பப் பெற்றுள்ளன.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள அமைச்சர் ஜிதேந்திர சிங்,  ரூ. 21,074.43 கோடி மதிப்பிலான மோசடிகள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான அனுமதி நிலுவையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவிடம் (ரூ. 20,312.53 கோடி) 101 விசாரணை அனுமதிகள், பஞ்சாப்பிடம் (ரூ. 298.94 கோடி) 12 விசாரணை அனுமதிகள், சத்தீஸ்கரிடம் (ரூ. 157.26 கோடி) 8 விசாரணை அனுமதிகள், மேற்கு வங்கத்திடம் (ரூ. 293.64 கோடி) 6 விசாரணை அனுமதிகள், ராஜஸ்தானிடம் (ரூ. 12.06 கோடி) 1 விசாரணை அனுமதிகள் நிலுவையில் உள்ளதாக அமைச்சர் ஜிதேந்திரா சிங் கூறியுள்ளார்.

Source: The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்