Aran Sei

ரோஹிங்கியா இஸ்லாமியர்களை நாடு கடத்திய வங்கதேசம் – மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

Image Credits: The Week

ரோஹிங்கியா இஸ்லாமிய அகதிகளை வங்காள விரிகுடாவில் உள்ள ஒரு தாழ்வான தீவுக்கு வங்கதேசம் மீண்டும் அனுப்பியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. இது புயல் அபாயம் உள்ள தீவு என்பதால் அகதிகளை இடம்மாற்றுவதற்கு மனித உரிமை குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனை மீறி பங்களாதேஷ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ரோஹிங்கியாக்கள் என்று அழைக்கப்படுபவர்கள் மியான்மரை விட்டு வெளியேறிய இஸ்லாமியச் சிறுபான்மையினர்.

பாஷன் சார் என்பது 20 ஆண்டுகளுக்கு முன் கடலிலிருந்து தோன்றிய ஒரு தீவு. அத்தீவிற்கு அகதிகளை இடம்மாற்றத்தில் ஈடுபடவில்லை என்று கூறிய ஐக்கிய நாடுகள் சபை, எந்த அகதியையும் நிர்பந்தித்து பாசன் சார் தீவுக்கு அனுப்ப வேண்டாம் என்று அரசிடம் வலியுறுத்தியுள்ளது. .

“எங்களை பலவந்தமாக இங்கு அழைத்து வந்துள்ளார்கள்” –  ரோஹிங்கியா அகதிகள் கண்ணீர்

வங்கதேசம் கடற்படை 1,804 ரோஹிங்கியாக்களை ஐந்து கப்பல்களில் தீவுக்கு அழைத்துச் சென்றுள்ளது. அகதிகள் டெக்கில் மர பெஞ்சுகளில் அமர்ந்து, வாத்துகள், புறாக்கள் மற்றும் கோழிகளை மூங்கில் கூடைகளில் கொண்டுசென்றுள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள முகக்கவசங்களை அணிந்திருந்தனர்.

மியான்மர் வன்முறையிலிருந்து தப்பிய 1,642 ரோஹிங்கியாக்கள் (முதல் குழு) இந்த மாத தொடக்கத்தில் மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ள முகாம்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட தீவுக்கு அனுப்பப்பட்டனர்.

100,000 பேருக்கு வீட்டுவசதிகளுடன் தீவைப் பாதுகாப்பதற்காக அரசு 12 கிமீ (7.5 மைல்) தூரத்திற்கு இரண்டு மீட்டர் (6.5 அடி) உயர தடுப்பை கட்டியுள்ளது. “இந்தத் தீவு முற்றிலும் பாதுகாப்பானது” என்று வெளியுறவு துறை அமைச்சர் அப்துல் மோமன் தலைநகர் டாக்காவில் இருந்து ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

இடமற்று நடவடிக்கை எதிர்ப்பை எதிர்கொண்டது. இது கடுமையான வானிலையை கொண்ட பகுதி என்பதால் உதவி குழுக்களிடமிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. 1991-ம் ஆண்டில், ஒரு 4.5 மீட்டர் (15-அடி) சூறாவளியின் காரணமாகக் கிட்டத்தட்ட 143,000 பேர் அத்தீவில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்