இஸ்ரேலியப் படையினர் காசாவின் எண்ணற்ற இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளதாக அல்-ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று (மே 16) நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் குறைந்தபட்சம் 16 பெண்கள், 10 குழந்தைகள் உட்பட 42 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், எண்ணற்றோர் காயமடைந்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
இஸ்ரேலியப் படையினர் காசாவின் மீது எட்டாவது நாளாக தாக்குதல் நடத்திவருகின்றனர்.
இஸ்ரேலியப் படையினரின் தாக்குதல் தொடங்கியதிலிருந்து தற்போது வரை 58 குழந்தைகள், 34 பெண்கள் உட்பட மொத்தமாக 192 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அல்-ஜசீரா குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அவையின் தலைவர் அன்டோனியோ குடரோஸ், “மேலும் தாக்குதல் நடத்தப்படுவது பல பகுதிகளில் கட்டுப்படுத்தவியலாத நெருக்கடி நிலையை ஏற்படுத்தும். எனவே, உடனடியாக அதிர்ச்சியூட்டும் இந்த வன்முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.” என்று கூறியுள்ளதாக அல்-ஜசீரா செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ள அல்-ஜசீரா பத்திரிகையாளர், காசாப் பகுதியில் அரிதாக ஒரு மணிநேரம் மட்டுமே அமைதி நிலவியதாகவும், இஸ்ரேலிய உளவு விமானங்கள் மேல்நோக்கி வட்டமிடுதல் மற்றும் வானத்தை கட்டுப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
இதேபோன்று, இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே அமைதி ஏற்படுத்துவது குறித்து பேசிய அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், “ஜனநாயகம்,பாதுகாப்பு, சுதந்திரத்தோடு வாழ இரு நாடு அரசுகளுக்கும் உரிமை உள்ளது. அமைதியை ஏற்படுத்தும் விதமாக எனது நிர்வாகம் தொடர்ந்து செயல்பாடும்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் ஏறத்தாழ 3000 ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளதாக அல்-ஜசீரா செய்தி குறிப்பிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.