Aran Sei

இஸ்ரேலியப் படையினரின் தாக்குதலில் 149 பாலஸ்தீனர்கள் பலி – இஸ்ரேல் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஆதரவு

டந்த ஒரு வாரத்தில், இஸ்ரேலியப் படையினர் பாலஸ்தீனத்தின் மீது நடத்திய தாக்குதலில் 44 குழந்தைகள் உட்பட 149 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 950க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அல்-ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலியப் படையினர் தொடர்ந்து ஏழாவது நாளாக காசாப்பகுதியில் தாக்குதல் நடத்தி வருவதாகவும், நேற்றைய தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாவும், செய்தி நிறுவனங்களின் கட்டிடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் 31 குழந்தைகள் உட்பட 113 பாலஸ்தீனர்கள் மரணம் : தரைவழியாகவும் தாக்க இஸ்ரேல் திட்டம்

மேலும், ஹமாஸ் படையின் தலைவர் யெஹ்யா அல் சின்வரின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அல்-ஜசீரா செய்தி தெரிவிக்கிறது.

இந்நிலையில், ஹமாஸ் படையினர் மீண்டும் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும், ஹமாஸ் படையினரின் தாக்குதலைத் தடுக்கும் விதமாக இஸ்ரேல் தனது ஏவுகணைத் தடுப்பு அரணான “அயர்ன் டோம்” செயல்பாட்டில் வைத்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு இஸ்ரேலியப் படையினர் அகதிகள் முகாம்மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அல்-ஜசீரா உட்பட எண்ணற்ற ஊடக நிறுவனங்களின் கட்டிடம் தாக்கப்பட்டுள்ளதாகவும் அல்-ஜசீரா செய்தி கூறுகிறது.

இஸ்ரேலின் தாக்குதலில் 67 பாலஸ்தீனர்கள் மரணம் : காசா பாதுகாப்பற்ற இடமாகியுள்ளது என குழந்தைகளின் பாதுகாப்பிற்கான மையம் கருத்து

இந்நிலையில், இந்தத் தாக்குதல் நடவடிக்கை குறித்து தெரிவித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு, இந்த தாக்குதல் தொடரும் என்று தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஹமாஸ் படையினரின் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்குத் தனது ஆதரவை தெரிவித்துள்ளதாகவும், இஸ்ரேல் மீதான தாக்குதல்களை கண்டித்துள்ளதாகவும் அல்-ஜசீரா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்