Aran Sei

இந்து கோயில்களுக்கு வழங்கும் நிதி சிறுபான்மையினர்களுக்கு செல்கிறது – பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் குற்றச்சாட்டு

ந்து கோயில்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும் நிதிகள் சிறுபான்மையினருக்கு மற்றும் நாத்திகர்களுக்குப் போய்ச் சேருவதால், அரசாங்கத்திடம் இருந்து கோவில்களை மீட்க வேண்டும் என போபால் நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கங்களிடம் இருந்து கோவில்களை மீட்பதற்காக பிரக்யாராஜ்ஜில் கும்பமேளாவை ஒருங்கிணைந்த பாரத் பக்தி அகடா போராட்டம் நடத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போபாலில் பாரதி பக்தி அகடாவின்  அலுவலகத்தைத் திறப்பு விழாவில் கலந்துக் கொண்டபோது அவர் இதனை கூறியுள்ளார்.

”நம்முடைய இடங்கள் (கோவில்கள் மற்றும் மடங்கள்) மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு (கோயில் கமிட்டிகள்) அரசாங்கத்தின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்து கோவில்களுக்கு வழங்கப்படும் பெரும் தொகைகள் உள்ளிட்ட நன்கொடைகள் சிறுபான்மையினருக்கு செல்கிறது. இது நாத்திகர்களுக்குச் செல்கிறது” என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசாங்கத்திடம் கோயில்களின் நிர்வாகம் இருப்பதை பாரத் பக்தி அகடா எதிர்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Source : The Indian Express

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்