Aran Sei

கடவுளின் சக்தியை அதிகரிக்க கோயிலுக்கு அடியில் தங்கத்தைப் புதைத்த நீதிபதிகள்: குற்றவழக்குப் பதிய உத்தரவிட்ட நீதிமன்றம்

டந்த பத்தாண்டுகளுக்கு முன்னர், மகாராஷ்ட்ரா மாநிலத்தின் மோத்தா தேவி கோயில் அறக்கட்டளையின் உறுப்பினர்களான மூன்று மாவட்ட நீதிபதிகள் (தற்போது பதவியில் இருப்பவர்கள்), நிதி மோசடி மற்றும் மூட நம்பிக்கையில் ஈடுபட்ட சம்பவத்தில் மும்பை உயர் நீதிமன்றம் குற்றவியல் வழக்கைப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தின், அகமதுநகர் பகுதியில் மோத்தா தேவி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு வருடந்தோரும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

கடந்த 2009-10 ஆம் ஆண்டு, கோயிலின் அறக்கட்டளையை, வழிநடத்திய உள்ளூர் சாமியார் பிரதீப் ஜாதவ் எனும் நபர் கோயிலை மறுசீரமைப்பு செய்யுமாறு அறக்கட்டளையிடம் கோரினார்.

தமிழக கோயில்களை மீட்க வேண்டும் – ஜக்கிக்கு ஆதரவாக களமிறங்கிய நகைச்சுவை நடிகர் சந்தானம்

அதன்படி,  மோத்தா தேவி கோயில் அறக்கட்டளையின் உறுப்பினர்களான மூன்று நீதிபதிகள், அறக்கட்டளையின் பணத்தைப் பயன்படுத்தி, மோத்தா தேவி கோயிலில் இருக்கும் கடவுளின் சக்தியை அதிகரிப்பதற்காக இரண்டு கிலோ தங்கத்தை கோயிலின் அடியில் புதைத்து வைக்கும், தீர்மானத்தை நிறைவேற்றினர்.

ராமர் கோயில் கட்டுமானம் – போலியாக நன்கொடை பெற்றதாக ஐந்து பேர் மீது வழக்கு

மேலும் பிரதீப் ஜாதவின் வழிகாட்டுதல் படி, தங்கத்தின் மூலம் ஒரு ஆயுதத்தைச் செய்யவும், மற்றொரு விநோதமான சடங்கைச் செய்வதற்கு 25 லட்சம் ரூபாயை செலவும் செய்துள்ளனர். இந்த மொத்த நிகழ்வும், யாருடைய அனுமதியும் பெறாமலும், கோயிலின் மற்ற அதிகாரிகளுடன் கலந்தோலாசிக்காமலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் கட்ட மக்களிடம் பணம் மோசடி – கைது செய்து காவல்துறை நடவடிக்கை

இந்தச் சம்பவம் 2010 ஆம் ஆண்டு நடைபெற்றிருந்தாலும், 2017 ஆம் ஆண்டு, மகராஷ்ட்ராவின் உள்ளூர் பத்திரிகையான லோக்மாத் எனும் பத்திரிகையின் மூலம் வெளி கொண்டுவரப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அந்தஷ்ராத நிர்மூலன் சமிதி எனும் ( பகுத்தறிவு ) இயக்கத்தின் தலைவர் நரேந்திர தாபோல்கர் காவல் ஆணையரிடத்தில் புகாரளித்திருந்தார். பல ஆதாரங்களைச் சமர்ப்பித்த பின்னரும், இந்தச் சம்பவம் தொடர்பாக அரசு ( பாஜக – சிவசேனா) எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

ராமர் கோயில் கட்டுவதற்கான நிதி திரட்டல் – டெல்லியில் நன்கொடை பேரணியை துவங்கிய பாஜகவினர்

இதையடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு,  நம்தேவ் கராட் எனும் நபர் மோத்தா தேவி கோயிலின் அறக்கட்டளை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அயோத்தி ராமர் கோயில் : ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய பாஜக எம்.பி கவுதம் கம்பீர்

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், உள்ளூர் சாமியரான பிரதீப் ஜாதவ், கோயிலில் நடைபெற்ற சடங்குக்காக பசுவின் பித்தப்பையை கேட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், ஒரு பித்தப்பையின் விலை 2000 ரூபாய் எனவும் சாமியார் அது போன்று 500 கிராம் பித்தப்பையை கேட்டுள்ளார் எனவும் தெரிவித்திருந்தார்.

தொல்லியல் ஆய்வு எனும் பெயரில் இலங்கையில் இடிக்கப்பட்ட இந்து கோயில் – வைகோ கண்டனம்

மேலும், ”இந்தச் சம்பவத்தில் எத்தனை பசுக்கள் கொல்லப்பட்டது, எத்தனை பித்தப்பைகள் சேகரிக்கப்பட்டது என்பது விசாரிக்கப்பட வேண்டும்” என்று நம்தேவ் கராட் கூறியுள்ளார்.

நம்தேவ் கராட்டின் புகாரை ஏற்றுக் கொண்ட மும்பை உயர் நீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழும், மகாராஷ்டிராவின் நரபலி தடுப்புச் சட்டம், மனிதாபிமானமற்ற, தீய மற்றும் அகோரி நடைமுறைகள், கறுப்பு மாந்த்ரீகச் சட்டம் 2013 (ஏமாற்றுதல், குற்றவியல் சதி) ஆகியவற்றின் கீழும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

1000 கோடி மதிப்பீட்டில் இந்து கோயில் : இஸ்லாமாபாத்தில் கட்ட அனுமதித்த பாகிஸ்தான் அரசு

மேலும், இந்தச் சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நீதிபதி ஒருவர் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் கோரி மனுவையும் நீதிமன்றம்  நிராகரித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்