Aran Sei

மோடியின் வங்கதேசப் பயணம் தேர்தல் விதிமுறைக்கு எதிரானது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி வங்கதேசம் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருப்பது தேர்தல நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. இது தொடர்பாக விரைவில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பச்சிம் மெதினிபூர் மாவட்டம் காரக்பூரில் நடைபெற்ற பேரணியில் பேசிய மம்தா, “நான் வங்கதேசத்திலிருந்து மக்களை அழைத்து வந்து ஊடுருவல்களை ஊக்குவித்ததாக அவர்கள் (பா.ஜ.க) குற்றம்சாட்டிகிறார்கள்  ஆனால் வாக்கு சேகரிப்பதற்காக மோடி வங்கதேச சென்றுள்ளார். மேற்கு வங்கத்தில் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. மோடி வங்கதேசத்தில் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இது தேர்தலை நடத்தை விதிமுறையின் ஒட்டுமொத்த மீறல்.” என தெரிவித்துள்ளார்.

சாதி, மத மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு – காவல்துறைக்கு உத்தரவிட்ட டெல்லி அரசு

வங்கதேசத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி, வங்கதேசத்தின் கோபால்கஞ்ச் மாவட்டம் ஒருகாண்டியில் உள்ள மத்துவா சமூகத்தின் ஆன்மீக குரு ஹரிசந்த் தாக்கூர் பிறந்த இடத்தில் உள்ள கோவிலில் சனிக்கிழமை (மார்ச் 27)  பிரார்த்தனை செய்தார்.

“2019 மக்களவைத் தேர்தலில், வங்கதேச நடிகர் காஜி அப்துல் நூர், எங்கள்(திரிணாமுல் காங்கிரஸ்) பேரணியில் கலந்து கொண்டதற்காக, இந்தியா, வங்கதேச அரசாங்கத்துடன் பேசி, அவரது விசாவை ரத்து செய்தது. இங்குத் தேர்தல் நடந்து வரும்போது, ஒரு பகுதி மக்களிடம் வாக்கு கேட்க,  நீங்கள் (மோடி) வங்கதேசத்திற்கு சென்றுள்ளீர்கள். உங்கள் விசா ஏன் ரத்து செய்யப்படக் கூடாது? தேர்தல் ஆணையத்திடம் இது தொடர்பாக புகார் செய்வோம்” என மம்தா கேள்வி தெரிவித்துள்ளார்.

Source : Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்