Aran Sei

மோடியின் ஏழு(ஏழரை) ஆண்டுகள்: இந்தியா ஏன் ஒரு ஜோ பைடனைத் தேட வேண்டும்?

ந்த வாரத்துடன் மோடி பதவிக்கு வந்து ஏழு ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. ஆளும் கட்சியின் அதிகாரத்திற்கான ஒற்றைக் கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்திய அரசியல் பொருளாதாரம் கால நிலை மாற்றம் போன்றதொரு மாற்றத்தை அடைந்திருப்பதை காணமுடியும்.

வடக்கே உத்திரப்பிரதேசத்திலிருந்து கிழக்கே அசாம் வரை ஒவ்வொரு மாநிலமாக வென்று, நாடு முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் பாஜக தனது கோட்டையை வலுப்படுத்தி உள்ளது. நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா என்ற இரட்டை அரசியல் தலைமையில் இந்தியாவின் ஆதிக்கம் மிக்க தேசியக் கட்சியாக அக்கட்சி உருவெடுத்துள்ளது. இதே நேரத்தில்தான் அதன் முக்கிய தேசிய எதிர்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ், எங்கோ ஒரு மூலையில் தொலைந்து போன கட்சியாக, பண்டையப் பெருமிதங்களின் கற்பனையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. (அண்மையில் நடந்த அசாம், கேரளா, மே. வங்காளம் ஆகிய மாநிலத் தேர்தல் முடிவுகள் இதனை சரியாக மதிப்பீடு செய்யும்.)

தேகத்தால் மறைந்தாலும் இசையாய் மலரும் எஸ்பிபி – பிறந்தநாள் புகழஞ்சலி

எனினும், 1990 களின் தாராளமயவாத காலத்திற்குப் பிந்தைய  இந்தக் காலகட்டத்தில், இந்தியப் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் தேக்கமடைந்து நிற்கிறது. பெருகிவரும் தொற்று நோய் பரவலை அரசு மோசமாக கையாள்வதும், அதிகரித்து வரும் பொருளாதார அதிகார மையப்படுத்தலும், தற்காலிக முடிவுகளை எடுக்கும் கலாச்சாரத்தை நிறுவனமயமாக்குவதும், குறைந்தது அடுத்த 2024 பொதுத் தேர்தல் வரையிலாவது, ஒரு வலுவான பொருளாதார மீட்சிக்கான எந்த வாய்ப்புமில்லாத மிகச் சிறிய நம்பிக்கையையே தருகின்றன. இந்தியாவின் பொருளாதார செயல்திறனுக்கு வெகு தொலைவில் இருந்த தெற்காசிய நாடுகள் கூட தற்போது இந்தியாவைவிட முன்னேறி உள்ளன.(குறிப்பாக வங்கதேசத்தை கூறலாம்).

2019 ல் தொற்று நோய் பரவலுக்கு முன், இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை 23 விழுக்காடாக இருந்தது. அதன் ஆண்டு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி -8.0% விழுக்காடாக இருந்தது. இது வளரும் நாடுகளிலேயே மிக மோசமான அளவு ஆகும். (வங்க தேசம் 2020ல் 3.8% வளர்ச்சியைக் கண்டுள்ளது) மே 2021 வரை கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை, மிகப் பெரிய அளவிலான குறைத்துக் காட்டப்படும் கணக்கெடுப்பிற்குப் பின்னும் இந்தியாவில் ஒவ்வொரு பத்து லட்சத்திற்கும் 212 ஆக உள்ளது. உலகின் மிக அதிக அளவு தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நாடான, ஏழு ஆண்டுகள் முன்பு வரை மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியாவில் இந்த அளவீடுகள் புரிந்துக் கொள்ள முடியாதவையாகவும், பதட்டம் தருவதாகவும் உள்ளன.

பாஜக அரசால் வீழ்த்தப்பட்ட செங்கல்பட்டு மருந்து உற்பத்தி நிறுவனத்தின் வரலாறு – சூர்யா சேவியர்

இன்னும், இந்த ஏழாண்டு கால மோடி ஆட்சியில் வெறும் பொருளாதாரம் மட்டும் மோசமாக பாதிக்கப்படவில்லை. மோடியின் முதலாவது ஐந்தாண்டுகளாக ஆட்சியில்(2014-19) இந்திய ஜனநாயகமும் பொது நிறுவனங்களும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன(quarantine) , தற்போது இதுவரையிலான இரண்டாவது ஆட்சிக் காலத்தில் “ஊரடங்கு” (lock down) நிலைக்குள் நுழைவது போல் தோன்றுகிறது.

இந்தத் தொற்று நெருக்கடி நேரம் தற்போதைய அரசுக்கு நாடாளுமன்றத்திற்குரிய நடைமுறைகளை சட்டமுறையற்றதாக மாற்றுவதற்கு நயவஞ்சகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இரண்டாவது அலை துவங்கியதிலிருந்து இதுவரை அரசாங்கத்தின் செயல்பாடுகளைப் பகுப்பாய்வு செய்யும் நிலைக்குழுக்கள் ஒருமுறை கூட கூடவில்லை. மெய்நிகர் தளங்களில் பிரதமர் தனது கூட்டங்களை தவறாமல் நடத்தி வரும்போதும் நாடாளுமன்ற மெய்நிகர் சந்திப்பு இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

நாடாளுமன்றம் இயல்பாக நடந்த போதே, போதுமான மறு ஆய்வு இன்றியும், நாடாளுமன்ற விவாதமோஅல்லது  பரிசீலனையோ இன்றி அவசரகதியில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. தற்போது அதுவே நிலையான நடைமுறையாக மாறியுள்ளது. ஒவ்வொரு பொது நிறுவனமும் அடிபணியச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பு மாநில தரத்தைக் குறைத்ததிலிருந்து சர்ச்சைக்குரிய சிஏஏ வரை மோடி – ஆமித் ஷா வின் ஏழாண்டுகால ஆட்சியின் அனைத்து நகர்வுகளும் ஒரு காலத்தில் இந்தியாவை வடிவமைத்த, கூட்டாட்சி மற்றும் சகோதர உறவுகள் (அரசியலமைப்பு எண்ணியபடி) “பின்னூட்ட வளையத்தை” மூச்சுத்திணறச் செய்துள்ளது. சிபிஐ, தேர்தல் ஆணையம், ஏன் உச்ச நீதிமன்றம் போன்ற நிறுவனங்களின் மீதான நிறுவன நற்பெயர் மற்றும் பொது மக்கள் நம்பிக்கை இரண்டும் அரிக்கப்பட்டு, அரசு- குடிமக்கள் நம்பிக்கையின் பற்றாக்குறை இடைவெளி மேலும் அதிகமாகி உள்ளது. எங்கும்(பல்கலை கழகங்களிலும் கூட)” பாதுகாப்பான இடம்” என்ற ஒன்று இல்லாதது போலவே தோன்றுகிறது.

மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்கு நாம் சாட்சியாக நிற்கிறோம்: அருந்ததி ராய்

இது தவிர, இந்திரா காந்தி காலத்திற்குப் பிறகு இது வரை இல்லாத அளவிற்கு, கடந்த சில ஆண்டுகளாக, அதிக அளவிலான சமூக செயற்பாட்டாளர்கள், எதிர்ப்பாளர்கள், சுற்றுச்சூழலியலாளர்கள் ஆகியோர் அரசியல் காரணங்களுக்காக அதிக நேரம் காவல்துறை காவலில் செலவிட்டுள்ளனர். இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து இதுவரை, நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களுக்கு இது போன்ற தண்டனையிலிருந்து பாதுகாப்பு ஒரு போதும் கிடைத்ததில்லை.

காவல்துறை மற்றும் அக்கறையற்ற அரசு ஆகியவற்றின் ஆதரவுடன் “நிறுவனமயமான தண்டனையின்மை” கலாச்சாரம் என்ற  புதிய மக்கள் – அரசு ஒருங்கிணைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு போதிக்கவும் படுவதாக  தோன்றுகிறது. இதனைப் பயன்படுத்தி  நாடு முழுவதும் வகுப்புவாத வெறுப்பையும், சமூக அவநம்பிக்கையையும் விதைக்கும் கும்பல்கள் கவர்ந்திழுக்கப்படுகின்றன.

பிரதாப் பானு மேத்தா அண்மையில் கூறியது போல: “நாட்டில் தற்போது முன்னோடியில்லாத இரக்கமற்றத் தன்மையை  நியாயப்படுத்தும் தார்மீக  உளவியல் குடிமைப் சமூகத்தின் இயல்புநிலை யாகி வருகிறது (எனத் தோன்றுகிறது). புதிய நிர்வாக பாணிக்கு நன்றி.”

கொரோனா பேரிடர்: வைரசின் இரக்கமின்மைக்கும்,  மோடி அரசின் இரக்கமின்மைக்கும் சம பங்கு உண்டு – மருதையன்

அமெரிக்காவிடமிருந்து இந்தியா எதனைக் கற்றுக் கொள்ள வேண்டும்

இத்தகைய பிரதிபலிப்புகளுக்கு இடையில், இந்தியாவின் ஜனநாயக செயல்பாடு மற்றும் அதன் குடிமக்களின் நல்வாழ்வு குறித்து நம்பிக்கையுடன் இருப்பது கடினம்தான்.

இனியும் ஒருவர் ஒரு நம்பிக்கைக் கீற்றை காண வேண்டுமெனில், அண்மையில் அமெரிக்காவில் நடந்தவற்றை நெருக்கமாகப் பார்க்கலாம். நான்காண்டு கால டொனால்ட் ட்ரம்பின் அதிபர் ஆட்சியில் அமெரிக்கா தனது சொந்த நிர்வாக அமைப்பு முறையில் மிக மோசமான ஜனநாயகப் சரிவைக் கண்டதுடன், டிரம்பிய மக்கள் ஆதரவு அரசு தன்னைத்தானே  நிர்வகித்துக் கொள்ளும் தார்மீக முறையிலிருந்து மாற்றியதுடன், அதனை உலகிற்கு வெளிப்படுத்தவும் செய்தது. ஜோ பிடேனின் வெற்றி இந்த பாதிப்பை மீட்டெடுப்பதில் நியாயமான முறையில் செயல்பட உதவியது. இதனை இப்போது பிடேனும் கூட ஒப்புக் கொள்கிறார்.

ஆளும் மாநிலங்களில் தேயும் பாஜக; தேர்தல்கள் சொல்லும் உண்மை – சரத் பிரதான்

முன்பு மிதமான அதிகரிப்பாளராகக் கருதப்பட்ட பிடேன், இதுவரை தனது சுய அரசியல் கருத்தியல் மனநிலைகளையும்  தாண்டிச் சென்று பெரிய சட்டமன்ற நிவாரணத் தொகுப்புகளை  ஊக்குவித்திருப்பது பல முற்போக்கு இடதுசாரிகளை எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ட்ரம்பிற்குப் பிந்தைய உலகத்தில், அமெரிக்க  தனது “நடுத்தர வர்க்கத்தினரை பாதுகாக்க” மட்டுமல்ல (மேலும் சிறந்த  வேலைகள், அதிக ஊதியங்கள், ஏற்கத்தக்க மலிவான சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம்)  ‘உலகிற்கு வழிகாட்டும் நாடாக நீடிக்கவும்’ போராடுகிறது.

ஜோ பிடேன் உடனான நேர்காணலுக்குப்பின் டேவிட் புரூக்ஸ்,” சிலர் தங்கள் உலக கண்ணோட்டத்தை கருத்தியல் கட்டமைப்புகளில் இருந்தோ அல்லது ‘பிற்போக்கு வாதம் அல்லது முற்போக்குவாதம்’ ஆகிய தத்துவார்த்த  நகர்வுகளிலிருந்து பெறுகின்றனர். பிடேன் தனது உலக கண்ணோட்டத்தை, வாழ்க்கை அனுபவத்திலிருந்தும், குறிப்பாக அவரது இளமைக் காலத்திலிருந்தும், அவரது பெற்றோர்கள் இந்த உலகை எவ்வாறு பார்க்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்ததிலிருந்தும் பெறுகிறார். இது அவர் முன் மொழியும் பெரிய சட்டமன்ற நிவாரணத் தொகுப்புகளுக்கான தார்மீக ஆணிவேர்களை  உருவாக்கி உள்ளது,” என்று எழுதுகிறார்.

இந்தியா (அமெரிக்கா சென்ற ஆண்டு இருந்தது போல்) தனது ஜோ பிடேனை கண்டுபிடிக்க வேண்டிய அத்தியாவசியமான திருப்புமுனையில் இருக்கிறது எனலாம். கருத்தியல் கட்டமைப்புகளுக்கு அப்பால் சென்று, தங்களுடைய மற்றும் மக்களின் வாழ்க்கை அனுபவங்களை, ‘நாட்டை மீண்டும் கட்டி எழுப்ப’, குடிமக்களைத் தலைமைத்  தாங்கி வழிகாட்டும் சக்தியாக  பயன்படுத்தும் ஒருவரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

மோடி அவர்களே! பிரதமராக இருக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டீர்கள் – அருந்ததி ராய்

ஒரு நபர் அல்லது தலைவர் பிரச்சனைகளை எவ்வாறு உணருகிறார் என்பது மட்டுமின்றி, அவர் அதனை எங்கிருந்து பார்க்கிறார் என்பதும் அவசியமாகிறது. பிடேன் அமெரிக்காவைப் பீடித்திருக்கும் நோயான பெரும்பாலான சிக்கல்களைத் தான் வளர்ந்த “சாதாரண மனிதன்” அல்லது “கீழ்த்தட்டு நடுத்தர வருமான வர்க்கத்தின்”  கண்ணோட்டத்தின் மற்றும் கண்ணாடி வழியாகப் பார்த்தார். மேலும் சுட்டிக்காட்ட வேண்டும் எனில், தனது நிர்வாக தத்துவமாக ‘மனித மாண்பினில்’ தீவிர கவனம் குவிப்பவனை தனித்துவம் மிக்க ஒரு தலைவனாக உருவாக்குகிறது. மேலும் அது அவனை, மாண்புகளை மையமாகக் கொண்ட, மனித உரிமைகள் அடிப்படையிலான அரசியல் வெளிப்பாடுகள் குறைவாக இருக்கும் இந்தச் சூழ்நிலையில் அரிய கருவூலமாக காட்டும்.

இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டாக பாலஸ்தீன இஸ்ரேல் நிகழ்வைக் கூறலாம். அண்மையில் ஏற்பட்ட இஸ்ரேல்- ஹமாஸ் மோதல்களில் அவர் நிதின் யாகுவை அழைத்துப் பேசியது, பிடேன் நிர்வாகத்தால் பின்புறத்தில் இருந்து தரப்பட்ட தூதரக அழுத்தம் ஆகிய பிடேனின் தொடர்ந்த தலையீடுகளால் அன்றி இஸ்ரேல் – பாலஸ்தீன போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்டிருக்கும் என்பதை கற்பனைக் கூட செய்ய இயலாது. ஒரு வேளை ட்ரம்ப்  அமெரிக்க அதிபராக இன்னும் இருந்திருந்தால் இது சாத்தியமாகி இருக்கும் என்று எண்ண இயலாது. தொற்று நெருக்கடியை கையாள்வதிலும் கூட பிடேன் பதவியேற்ற பிறகு பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு அதிக ஊக்கமளிக்கும் நிதி உதவிகளையும், நிவாரணப் பணிகளையும் நல்ல முறையில் நிறைவேற்றினார். மிக முக்கியமாக, பொருளாதார செயல்பாடுகளை மீட்டெடுக்க தனது மக்களுக்கு பெரும் அளவில் தடுப்பூசி போட்டதை குறிப்பிட வேண்டும்.

எங்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள் மோடி? – எழுத்தாளர் க.பொன்ராஜ்

மோடி- அமித் ஷா வின் ஏழாண்டு கால ஆட்சி இந்தியாவில் சமூகப் பொருளாதார  நிலப்பரப்பில் மிகப்பெரிய இடைவெளியை உருவாக்கி விட்டது. தேசிய அரசின் செயல்பாட்டின் மீதான மக்களின் நம்பிக்கையும், அவர்களுடைய வாழ்க்கையை முன்னேற்றுவதற்கான திறன் மீதான நம்பிக்கையும் ஆறாத வடுவாகவே உள்ளது. தொற்று நோய் பேரழிவை ஏற்படுத்தி,  லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் சீரழித்து விட்டதுடன், வரும் வாரங்களில் மேலும் ஏராளமானோர் பாதிக்கப்பட உள்ளனர்.

இவ்வேளையில் அரசியல் எதிர்கட்சிகளிடமிருந்து ஒரு “முற்போக்கான” குரலுக்கான தீவிர தேடலில், யார் ஒருவர் அரசின் மீது நம்பிக்கையை  மீட்டெடுக்க உதவும், சமூக, பொருளாதாரத்தில் மூலதனத்தை முதலீடு செய்பவராக இருக்கும், ‘உழைப்பாளர்கள் மற்றும் நடுத்தர வர்கத்தினரின்’ நலனை வேராகக் கொண்டு பணிபுரிபவராக இருக்கும் குரலாக இருப்பாரோ அத்தகைய ஒருவரை காண வேண்டியது மிக அவசியமாக உள்ளது.

www.thewire.in இணைய தளத்தில் தீபன்ஷூ மோகன் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

 

 

 

 

 

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்