Aran Sei

குஜராத்தில் மோடி பெயரில் கிரிக்கெட் மைதானம் – உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி அறிவுரை

credits : india tv news

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பலர், கிரிக்கெட் மைதானத்திலிருந்து சர்தார் படேலின் பெயர் நீக்கப்பட்டதற்கு, வருத்தத்தை தெரிவித்துள்ளதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த மைதானம் 63 ஏக்கர் பரப்பளவில், 1,32,000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியை காணும் வகையில், 800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.

மோடியின் பெயரில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் – குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்

இந்த மைதானத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா (அமித் ஷாவின் மகன்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

நரேந்திர மோடி மைதானத்தில் ரிலையன்ஸ், அதானி முனைகள் – ராகுல் காந்தியின் ’நாம் இருவர், நமக்கு இருவர்’ கிண்டல்

இதே இடத்தில், 1983 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த சர்தார் வல்பாய் பட்டேல் மைதானம், 2015 ஆம் ஆண்டில் முழுவதுமாக இடிக்கப்பட்டது. மைதானத்தின் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து, சர்தார் பட்டேல் பெயரில், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை குடியரசு தலைவர் முறையாக திறந்து வைப்பார் என்று, ஊடகங்கள் செய்தி வெளயிட்டு வந்த வேலையில் அந்த மைதானத்திற்கு பிரதமரின் பெயர் சூட்டப்பட்டது.

பாகிஸ்தான் கொடியுடன் இருக்கும் ரிஹன்னா புகைப்படம் – உண்மைத்தன்மை என்ன?

மைதனானத்திற்கு மறுபெயரிடும் முயற்சி தவறானது என்றும், இது சர்தார் வல்லபாய் படலுக்கு அவமானம் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி குற்றசாட்டியுள்ளன.

“உங்க சாப்பாடும் வேண்டாம், திருத்தங்களும் வேண்டாம், கருப்புச் சட்டங்களை ரத்து செய்க” – போராடும் விவசாயிகள்

இதற்குப் பதிலளித்துள்ள மத்திய அரசு, நரேந்திர மோடியின் பெயர் புதிதாக கட்டப்பட்ட மோடேரா மைதானத்திற்கு மட்டுமே சூட்டப்பட்டுள்ளது என்றும், முழு விளையாட்டு வளாகமும் சர்தார் பட்டேலின் பெயரிலேயே செயல்படும் என்றும் தெரிவித்தது.

இந்நிலையியில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”குஜராத்தின் மருமகனான என்னிடம், அம்மாநிலத்தைச் சேர்ந்த பலர், மைதானத்திலிருந்து சர்தார் படேலின் பெயர் நீக்கப்பட்டதற்கு தங்களுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளனர். என்னுடைய பரிந்துரை என்னவென்றால், குஜராத் அரசு தன்னுடைய பிழையை சரி செய்து, மோடியிடம் கலந்தாலோசிக்காமல் செய்யப்பட்ட இந்த பெயர் மாற்றத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்