Aran Sei

உச்சநீதிமன்றத்தின் மின்னஞ்சலில் பிரதமரின் உருவப்படம் – வழக்கறிஞர்களின் புகாரை அடுத்து நீக்கம்

ச்சநீதிமன்றத்தின் பதிவு அலுவலகம்[REGISTRY]  வாயிலாக வழக்கறிஞர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் பிரதமரின் உருவப்படம் இடம்பெற்ற  விளம்பரம் இடம்பெற்றது கேள்விகளை எழுப்பியுள்ளது.

மின்னஞ்சல் கையொப்பத்தின் வாயிலாக இந்த விளம்பரம்  அனுப்பப்பட்டுள்ளது என்பதை எண்ணற்ற வழக்கறிஞர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்துகொண்டாலும் கொரோனா மரணமாக கருதப்படும் – உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம்

இந்நிலையில், இதுகுறித்து தேசிய தகவல் மையத்திடம் கேள்வி எழுப்பியுள்ள   உச்சநீதிமன்றத்தின் பதிவு அலுவலகம், “உச்சநீதிமன்றத்திற்கு யார் மின்னஞ்சல் சேவை வழங்குகின்றார். மின்னஞ்சல் கையொப்பத்திலிருந்து அந்தப் புகைப்படம் நீக்கப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், இதற்குப் பதிலாக உச்சநீதிமன்றத்தின் படத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தின் பதிவு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

பெகசிஸ் விவகாரம்- வல்லுநர் குழு அமைக்க உச்சநீதிமன்றம் முடிவு

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் வாட்ஸ்ஆப் குழுவில் வழக்கறிஞர் ஒருவர் இதுகுறித்து செய்தி அனுப்பிய நிலையில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள மூத்த வழக்கறிஞர் சந்தர் உதய் சிங், “உச்சநீதிமன்றம்   மற்றும் இந்தியாவின் அனைத்து பிற  நீதிமன்றங்களும் அரசாங்க அலுவலகங்கள் அல்ல, அவை அரசாங்கத்தின் பிரச்சார இயந்திரங்களாகப் பயன்படுத்தப்படுவதை  விரும்பவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்தப் படத்தை நீக்குவதாகத் தேசிய தகவல் மையம் தெரிவித்துள்ளது.

SOURCE: THE INDIAN EXPRESS

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்