Aran Sei

முதலமைச்சராக இருந்த மோடி தேசப்பாதுகாப்பு பற்றி பேசினார்; பிரதமர் மோடி சீனா குறித்து பேச மறுப்பது ஏன்? – ஒவைசி கேள்வி

சீனா-இந்தியா உறவுகள் குறித்து முழு நாடாளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று  அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதிஹதுல் முஸ்லிமின் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதின் ஓவைசி தெரிவித்தார்.

ஓவைசி தனது ட்விட்டர் பதிவில், “சீனா-இந்திய உறவுகள் மற்றும் எல்லையில் உள்ள விவகாரங்கள் குறித்து முழு நாடாளுமன்ற விவாதத்தை நாங்கள் கோருகிறோம். அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவை அனைத்து சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளுக்கும் அழைத்துச் செல்ல வேண்டும். நமது இறையாண்மையை மீண்டும் நிலைநாட்டவும், பொதுமக்களுக்குத் தெரிவிக்கவும் இது வாய்ப்பை ஏற்படுத்தும்.” என்று தெரிவித்துள்ளார்

“தேவைப்பட்டால், மக்களவை விதி 248 இன் கீழ் சபையின் ரகசிய கூட்டத்தை நடத்தலாம்” என்றும், “பிரதமர் மோடியின் மௌனம், மறுப்பு போன்ற வியூகம் இந்தியாவிற்குத்தான் பின்னடைவை ஏற்படுத்துகிறது. நமது நாடு பலவீனமாக இருப்பதை போன்ற தகவல், சீனாவிற்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது. உண்மையை எதிர்கொள்ள நமது இயலாமையை இது உணர்த்துகிறது. துரதிர்ஷ்டவசமாக இந்த அரசு இந்தியர்களை பிரித்து வைப்பதன் மூலம் உள்நாட்டில் நம்மை பலவீனப்படுத்துகிறது. உள்நாட்டின் இந்த பிளவு, அண்டை நாடுகளுடன் நமது பகையை அதிகரிக்க செய்து விடுகிறது. இதை சீனா பயன்படுத்திக் கொள்கிறது.

பொய் வழக்குகள், காவலில் வன்முறை: ஸ்டான் சுவாமிகளை உருவாக்குகிறதா கேரளா?

2014க்கு முன்பு, எல்லையில் பிரச்சனை இல்லை, டெல்லியில் தான் பிரச்சனை என்று பிரதமர் மோடி கூறி வந்தார். முன்னெப்போதையும் விட இப்போதுதான் அந்த வார்த்தை சரியாக பொருந்திப் போகிறது. முதல்வராக இருந்தபோது மோடி தேசிய பாதுகாப்பு பற்றி பெரிதாக பேசுவார். ஆனால் இப்போது பிரதமராக உள்ள மோடி சீனாவின் பெயரைக் கூட உச்சரிக்கவில்லை. என்ன நடந்தது? ஏன் இந்தத் தயக்கம்?  என்று என்று  அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதிஹதுல் முஸ்லிமின் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதின் ஓவைசி கேள்விகள் எழுப்பியுள்ளார்.

Source: aninews

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்