Aran Sei

மற்றவர்களின் பார்வையைப் புரிந்து கொள்ள மோடி தயாராக இல்லை – மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் விமர்சனம்

Image Credits: DNA India

பிரதமர் நரேந்திர மோடி மற்றவர்களின் பார்வையைப் புரிந்து கொள்ள தயாராக இல்லை, இது தான் இந்தியா எதிர்கொள்ளும் அனைத்து பிரச்னைகளின் மையமாக உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவரும் கபில் சிபில் தெரிவித்துள்ளார்.

கிரிஷ் பட்டேல் நினைவு சொற்பொழிவில் ’மோடியின் காலத்தில் இந்தியா’ என்ற தலைப்பில் பேசியபோது அவர் இதனை கூறியுள்ளார்.

மாற்றத்தை விரும்பும் ஒரு நாட்டின் அபிலாஷைகளையும் ஆன்மாவையும் புரிந்து கொள்ளாமல், கட்டப்பட்டும் சென்ரல் விஸ்டா போன்ற திட்டங்களுடன் ஜனநாயகத்திற்கு ஒரு தொடர்பு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமித் ஷாவை சந்தித்த பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் – சிவசேனா கண்டனம்

”ஜனநாயகம் என்பது கட்டிதத்திற்குள் இருக்கும் மக்களுடன் தொடர்புடையது. அவர்கள் நாட்டின் பலதரப்பட்ட அபிலாஷகளை பிரதிபலிக்கிறார்கள். நீங்கள் விரும்பு எந்த ஒரு கட்டமைப்பையும் நீங்கள் உருவாக்கலாம். ஆனால் மாற்றத்தை விரும்பும் ஒரு நாட்டின் அபிலாஷைகளையும் ஆன்மாவையும் புரிந்து கொள்ளாமல் ஒரு போது ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்த முடியாது” என கபில் சிபில் தெரிவித்துள்ளார்.

”நீங்கள் மக்களுடன் பேசாமல், மக்களுடன் உரையாடாமல், மக்களை தொடர்புக் கொள்வதை விரும்பாமல்” இருந்தால், எந்த கட்டடமும் ஜனநாயகத்தை அடையாளப்படுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘பழைய முறையிலேயே நெல் கொள்முதல் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கடிதம்

”மோடியிடம் இருக்கும் பிரச்னை என்னவென்றால், அவர் மற்றவர்களின் பார்வையை ஏற்க தயாராக இல்லை. இதனால், தான் நாம் சிக்கலில் இருக்கிறோம்” என கபில் சிபில் கூறியுள்ளார்.

”குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்” என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதியை விமர்சித்துள்ள கபில் சிபில், ”நாட்டில் அதிகபட்ச அரசு இருக்கிறது. ஆனால், நிர்வாகம் இல்லை” என தெரிவித்துள்ளார்.

‘இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்காவிடில் ஜலசாமாதி அடைவது உறுதி’ – சாமியார் பரமஹான்ஸ் ஆச்சார்யா

”நிர்வாகம் எங்கே இருக்கிறது? மக்களை அணியும் ஆடையை வைத்து அவர்களை அடையாளம் கண்டால் அதற்குப் பெயர் நிர்வாகமா?. பட்டியலின மக்கள் தாக்கப்படும்போது அமைதியாக உள்ளீர்கள் இது தான் நிர்வாகமா?. ஆக்சிஜன் கிடைக்காமல், படுக்கைகள் இல்லாமல், தடுப்பூசிகள் இல்லாமல் மக்கள் மடிந்தார்கள். இது தான் நிர்வாகமா?” என கபில் சிபில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Source : The New Indian Express

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்