ஊழல் ஒழிப்பதாக கூறி, ஊழல் எதிர்ப்பை முற்றிலும் ஒழித்துப் பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார் என அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறை கூட்டு கூட்டத்தில், கடந்த புதன்கிழமை (அக். 20) பேசிய மோடி ஊழலை ஒழிக்க தொடர்ந்து பாடுபட்டு வருவதாக கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள அறப்போர் இயக்கம், ஊழலை ஒழிப்பதாக கூறி பிரதமர் மோடி ஊழல் எதிர்ப்பை முற்றிலுமாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளார் என கூறியுள்ளது.
சமத்துவத்திற்கான நீண்ட போராட்டமும் மறுக்கப்படும் அரசியல் உரிமைகளும் – மீனா கந்தசாமி
மேலும், ஊழல் ஒழிப்பு எதிராக பிரதமர் மோடி எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
பிஎம் கேர்ஸ் என்ற பெயரில் மக்களிடம் நன்கொடைப் பெற்று, அதன் கணக்கை யாருக்கு தெரிவிக்காமல், வெளிப்படைத்தன்மைக்கு புதிய இலக்கணம் படைத்துள்ளார் மோடி என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
”ஒரு அரசு ஊழியர்மீது ஊழல் புகார் வந்தால், புகாருக்கு உள்ளான ஊழியரின் உயர் அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்றால்தான் வழக்கு தொடர முடியும் என்ற சட்ட திருத்தம் கொண்டு வந்து ஊழலில் ஈடுபடும் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியுள்ளார். தன்னுடையை துறையில் ஊழல் நடத்துள்ளது என்றால் எந்த உயரதிகாரி விசாரணைக்கு அனுமதிக் கொடுப்பார்.” என அறப்போர் இயக்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கருப்பு பணத்தை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக கொடுப்பதை மறைக்க தேர்தல் பத்திரங்கள்மூலம் நன்கொடை பெறலாம் என்று புதிய சட்டம் கொண்டு வந்து, கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற உதவி வருகிறார் மோடி என தெரிவித்துள்ளனர்.
”அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்கள்மீதான ஊழல் புகார்களை விரைவாக விசாரித்துத் தண்டனை வழங்க அமைக்கப்பட்ட லோக்பால் நியமனத்தை எதிர்க்கட்சித் தலைவர் இல்லை என்ற காரணத்தைக் கூறி பல ஆண்டுகளாக இழுத்தடித்து வருகிறார்.”என அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.