Aran Sei

மோடியை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவதே எனது அடுத்த அரசியல் நகர்வு – மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

பிரதமர் நரேந்திர மோடியை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவதே எனது அடுத்தக் கட்ட அரசியல் நகர்வு என்று மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றைய தினம் தேசிய அரசியலில் தாங்கள் என்ன பங்காற்றப் போகிறீர்கள் என பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது,”நான் சொல்வதற்கு ஒரே ஒரு விஷயம் தான் உள்ளது; மோடியை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவது” என்று மம்தா பானெர்ஜீ தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது என கூறிய சுகாதார அமைச்சரை காணவில்லை – ப. சிதம்பரம் குற்றச்சாட்டு

மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் சம்யுக்த கிஷன் மோர்ச்சா விவசாயிகள் தலைவர் ராகேஷ் திகைத் உட்பட அதன் பிரதிநிதிகளைச் சந்தித்த அவர், விவசாயிகளுக்கு ஆதரவு தர வேண்டி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள மம்தா பானெர்ஜி,” நாங்கள் தொடக்கத்திலிருந்தே விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறோம், எங்கள் மாநிலத்தில் அதற்கெதிராக தீர்மானமும் நிறைவேற்றியுள்ளோம்” என்று கூறியுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

தடுப்பூசி காப்புரிமை தள்ளுபடிக்கு உலக வங்கி எதிர்ப்பு – புதிய கண்டுபிடிப்புகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என உலக வங்கி தலைவர் கருத்து

மேலும், கொரோனா தொற்று பரவல் நிலை சரியானதும் டெல்லிக்கு வந்து பார்வையிடுமாறும் விவசாய சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்