Aran Sei

காங்கிரஸ் ஆட்சியை விட அதிக அவசர சட்டங்களை பிறப்பித்துள்ள பாஜக அரசு –  7 ஆண்டுகளில் 76 அவசர சட்டங்கள்

credits : the indian express

காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டு ஆட்சியைவிட மோடியின் 7 ஆண்டுகால ஆட்சியில் அதிக அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

2004 மே மாதம் முதல் 2014 வரையிலான 10 ஆண்டு காலத்தில் 61 அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், மே 2014 பிறகு 76 அவசர சட்டங்கள் பிறப்பக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறாதபோது அவசரச் சட்ட வழியைப் பயன்படுத்த அரசியலமைப்பு அனுமதிக்கிறது. ஒரு அவசரகால நிலைமையைச் சமாளிக்க ஏற்கனவே உள்ள சட்டத்தில் மாற்றம் செய்யவோ அல்லது புதிய சட்டத்தை இயற்றவோ தீர்மானிக்கும் மத்திய அமைச்சரவை அதைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன், அவசரச் சட்டமாக மாறுகிறது.

ஊபா சட்டத்தில் சித்திக் கப்பான் : 5000 பக்க குற்றப்பத்திரிகை சட்டப்படி செல்லாது என வாதம்

ஒவ்வொரு அரசாங்கமும் சட்டங்களை இயற்ற அவசர சட்டங்களைப் பயன்படுத்தினாலும், மோடி அரசு அவசர சட்டங்களைப் பயன்படுத்து விதம் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளதாக, தி வயர் தெரிவித்துள்ளது.

கடும் எதிர்ப்புகளையும் மீறி மூன்று வேளாண் சட்டங்களையும், அவரச சட்டங்களாக மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தியது. பின்னர், கடந்த ஆண்டு மழைக்காலக் கூட்டதொடரின்போது அவை சட்டங்களாக மாற்றப்பட்டன.

மருத்துவரை மிரட்டிய காங்கிரஸ் கட்சியினர் – பதவி விலகிய மருத்துவர் காவல் நிலையத்தில் புகார்

சமீபத்தில், தேசிய தலைநகர் பகுதி, கங்கை சமவெளிப் பகுதி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் காற்று மாசுப்பாட்டை கண்காணிக்க ஆணையம் ஒன்றை மத்திய அரசு அவசர சட்டம் ஒன்று இயற்றியிருந்தது.

காற்றின் தரம் மேம்படுத்தத் தொடங்கிய கடந்த மாதம் ஏன் இந்த அவசர சட்டம் இயற்றப்பட்டது என்பது தொடர்பான எந்த விவரமும் இல்லை என தி வயர்  செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்