Aran Sei

ஜம்மு காஷ்மீரில் உள்ள குற்றச் சட்டங்களை ரத்து செய்து, முழு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை

ம்மு காஷ்மீரில் உள்ள குற்றச் சட்டங்களை ரத்து செய்து, முழு மாநில அந்தஸ்தை மோடி அரசு வழங்க வேண்டும் என இந்திய ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

பிரதமர் மோடிக்கும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஜுன் 24 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ஜம்மு காஷ்மீரை வெறும் ரியல் எஸ்டேட்டிற்கான நிலமாக மட்டும் கருதக் கூடாது. அங்குள்ள மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்

ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து மீட்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. எந்தச் சந்தேகத்தையும், தெளிவின்மையையும் நீக்க வேண்டும்அரசியலமைப்புச் சட்டத்தால் நிறுவப்பட்ட ஒன்றை, அதே அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளை தவறாகப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் மாற்றிவிட முடியாது.” என அவர் கூறியுள்ளார்.

“நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில், குற்றச் சட்டங்களை ரத்து செய்து, ஜம்மு காஷ்மீரில் தற்போதைய நிலையை மீட்டெடுக்க வேண்டும். காஷ்மீர் பிரச்சினையின் அரசியல் தீர்வுக்கான தொடக்க வழியை முன்னெடுக்க அதுதான் ஒரே வழி. ஜம்மு- காஷ்மீர் ஒரு ‘மாநிலம்’ ஆகும், அது ஒரு இணைவு ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டு, இந்தியாவுடன் இணைந்தது. அது அந்த அந்தஸ்தை என்றென்றும் அனுபவிக்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் ‘ரியல் எஸ்டேட்’  செய்யும் நிலத்தின் ஒரு பகுதி அல்ல. ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமைகளும் விருப்பங்களும் மதிக்கப்பட வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 6, 2019 ஆம் தேதி பரிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து திரும்ப அளிக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தலைமை செய்தி தொடர்பாளருமான ரந்தீப் சுர்ஜேவாலா வலியுறுத்தியிருந்த நிலையில், சிதம்பரத்தின் ட்விட்டர் பதிவுகள் வந்துள்ளன.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்