Aran Sei

மோடியின் ஆட்சி கோடீஸ்வரர்களுக்கான ஆட்சியாக உள்ளது – மோடியின் தொகுதியில் பிரியங்கா காந்தி பேச்சு

பிரதமர் மோடியின் ஆட்சி பணக்காரர்களுக்கான ஆட்சியாக உள்ளது என உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சி கமிட்டியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

’கிசான் நியாய் பேரணி’யின் முதல் கட்டமாக ரொஹினியாவில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, ”மோடியின் ஆட்சியில் ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்கள், விளிம்புநிலை மக்கள், பெண்கள் என யாரும் பாதுகாப்பாக இல்லை. இந்த ஆட்சி மோடியின் கோடீஸ்வர நண்பர்களின் நலனுக்கான ஆட்சியாக உள்ளது” என கூறியுள்ளார்.

“இங்கு, விவசாயிகள் மக்களுக்கு உணவளிக்கிறார்கள், அவர்களின் பிள்ளைகள் எல்லையில் நாட்டைப் பாதுகாக்கிறார்கள். ஆனால், இங்கு லக்கிம்பூர் சம்பவம்போல ஒன்று நடைபெற்று விவசாயிகள் உயிரிழக்கும்போது, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவர்களது குடும்பம் இழந்து விடுகிறது.” என பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

கிராமத்தில் இருந்து வெளியேற மறுத்ததால் தாக்கப்பட்ட இஸ்லாமிய குடும்பம் – பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு பதிந்த காவல்துறை

இந்த நாடு மோடியுடையதோ அல்லது அவரின் அமைச்சர்களுடையதோ அல்ல எனக் கூறிய பிரியங்கா காந்தி, “இந்த நாடு உங்களுடையது (மக்கள்). நீங்கள் கவனமாக இருந்தால், நாட்டையும் உங்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியும். லக்னோவிற்கு வர முடிந்த பிரதமரால் லக்கிம்பூருக்கு வர முடியவில்லை. உலக நாடுகளை சுற்றும் பிரதமருக்கு, லக்கிம்பூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூற நேரமில்லை” என கூறியுள்ளார்.

இந்தியாவில் அதிகரிக்கும் நிலக்கரி பற்றாக்குறை – இருளில் மூழ்கும் மாநிலங்கள்

அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி நீக்கம் செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

”வேளாண் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், விவசாய நிலங்கள் பிடுங்கப்படும் என்பதை விவசாயிகள் அறிந்துள்ளதால் தான், போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்” என உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சி கமிட்டியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

Source : The New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்