மோடி அரசு அனைத்து அம்சங்களிலும் தோல்வியடைந்துவிட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார். மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்த ஒரு நாள் கழித்து அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், பொருளாதாரம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் மோடி அரசு தோல்வியடைந்துள்ளது.
‘மேகலயாவில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சித்தாவல்’ – வீழ்கிறதா காங்கிரஸ்
மேலும், ஆப்கானிஸ்தான் நெருக்கடியை ஒன்றிய அரசு கையாண்டது ஒரு ‘பிழை’ என்று அவர் கூறியுள்ளார். பெகாசஸ் வழியாக உளவு பார்த்த்தை பாதுகாப்பு மீறல் இதற்கு ஒன்றிய அரசு காரணம் என்று சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
உள்நாட்டு பாதுகாப்பு குறித்து கூறும் போது, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் காஷ்மீர் ‘இருண்ட நிலையில்’ இருப்பதாக ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
source: indiatoday
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.