Aran Sei

32வது நாளை தொட்ட விவசாயிகள் போராட்டம் – 100வது விவசாயி ரயிலை துவக்கி வைத்த மோடி

credits : the indian express

ஹாராஷ்டிராவில். நூறாவது விவசாயிகள் ரயிலை துவக்கி வைத்த நரேந்திர மோடி, இத்திட்டத்தினால் நாட்டின் விவசாயிகள் வலிமையடைவார்கள் என்று கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் பியூஷ் கோயல் முன்னிலையில், மஹாராஷ்டிராவில் உள்ள சங்கோலா பகுதியில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள ஷலிமர் பகுதிக்கு செல்லும் ரயிலை காணொலி மூலம் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

டெல்லி – மீரட் நெடுஞ்சாலையை கைப்பற்றிய விவசாயிகள் – தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்

இந்த விவசாயிகள் ரயில் திட்டத்தினால் விவசாயிகளின் வருமானம் கூடும், ஒவ்வொரு பிரதேசத்தின் விவசாயியும் மற்ற மாநில விவசாயிகளோடு இணைக்கப்படுவர் என்று கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “இந்நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். கோவிட்-19 சவால்கள் இருந்தும் கூட, கிசான் ரயில் இணையம் கடந்த நான்கு மாதங்களாக விரிவடைந்து, இப்போது நூறாவது ரயிலை அடைந்துள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம் – முடங்கியது டெல்லி – மீரட் அதிவிரைவு சாலை

இந்த ரயில்களில் குறைந்தபட்சம் குறிப்பிட்ட அளவில் பொருட்களை அனுப்ப வேண்டும் எனும் கட்டாயம் இல்லை, 50-100 கிலோ எடை இருக்கும் மூட்டைகளை கூட அனுப்பலாம் என்ற மோடி,  “தொலைவில் உள்ள சந்தைகளுக்கு தங்கள் உற்பத்தியை கொண்டு செல்ல விவசாயிகள் அதிகளவு பணம் செலவழித்தார்கள். இதற்காகத் தான் மூன்று வருடங்கள் முன் தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குகளை சந்தைக்கு கொண்டு செல்ல ஆகும் போக்குவரத்து செலவிற்கு 50% மானியம் வழங்கினோம்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானது என்றும் இதனால் விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்பை சந்திப்பார்கள் என்றும் நாட்டில் உள்ள பெரும்பாலான விவசாய சங்கங்கள் கூறி வருகின்றன. இந்த சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோரி, டெல்லியை முற்றுகையிட்டு, ஒரு மாதத்திற்கு மேல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்