Aran Sei

வெங்காயம், உருளைக்கிழங்கின் விலையைக் குறைக்க மோடி பிரதமர் ஆகவில்லை – ஒன்றிய அமைச்சர் கபில் பட்டீல்

வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் விலையை குறைப்பதற்காக நரேந்திர மோடி, பிரதமர் ஆகவில்லை என்று ஒன்றிய அரசின் பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் கபில் பட்டீல் கூறியிருக்கிறார்.

தானேவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறியதாவது, வரும் 2024-ஆம் வருடத்திற்குள் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர், இந்தியாவுடன் இணையும். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரால் மட்டும் தான் இதை செய்ய முடியும்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை சட்டம் ஆகிய தைரியமான முடிவுகளை மேற்கொண்டு நம் நாட்டை பிரதமர் மோடி வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இதே போன்று விலை ஏற்றத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியை குறை சொல்கிறார்கள். ஆட்டிறைச்சியை 700 ரூபாய்க்கும் பீட்சாவை 500 ரூபாய்க்கும் வாங்கும் மக்கள், 10 ரூபாய் மற்றும் 40 ரூபாய்க்கு கிடைக்கும் வெங்காயம் மற்றும் தக்காளி, விலை ஏறிவிட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள்.

‘கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான பட்ஜெட்’ – தி. வேல்முருகன் விமர்சனம்

வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்குகளின் விலையை குறைக்க அவர் பிரதமர் ஆகவில்லை. விலையேற்றம் எதனால் ஏற்படுகிறது? என்பதை புரிந்து கொண்ட மக்கள் பிரதமர் நரேந்திர மோடியை குறை சொல்ல மாட்டார்கள் என்று ஒன்றிய அரசின் பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் கபில் பட்டீல் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்