Aran Sei

பிரதமர் மோடியின் சகோதரர் தர்ணா போராட்டம் – பிரதமர் அலுவலக உத்தரவால் ஆதரவாளர்கள் தடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி, உத்தர பிரதேச மாநிலம், லக்னோ விமான நிலையத்தில் தர்ணா பேராட்டத்தில் ஈடுபட்டதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

விமான நிலையத்தில் பிரஹலாத் மோடியை வரவேற்க வந்த அவருடைய ஆதரவாளர்களை காவல்துறையினர் கைது செய்ததால், அதை கண்டித்து அவர் தர்ணா செய்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்கர் பரிஷத் 2.0: அலிகர் முஸ்லீம் பல்கலை., முன்னாள் மாணவர் கைது – மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றச்சாட்டு

“இன்று நான் பிரக்யராஜ் போக வேண்டியிருந்தது, என்னுடைய நிகழ்ச்சி நேற்று முதல் அங்கு நடைபெற்று வருகிறது. என்னுடைய ஆதரவாளர்கள் சிறையில் அடைக்கப்படும்போது, நான் சுதந்திரமாக வெளியே செல்வது சரியானதல்ல. ஆகவே, நான் இங்கு (லக்னோ விமான நிலையம்) உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தேன். நான் உணவும், தண்ணீரும் எடுக்கவில்லை. என் உயிரே போனாலும் நான் இங்கிருந்து எழப்போவதில்லை” என்று பிரஹலாத் மோடி கூறியதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

“ஏன் இப்படி செய்தீர்கள் (ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டது) என்று நான் காவல்துறையினரிடம் கேட்டபோது, பிரதமர் அலுவலகத்தின் உத்தரவின் பேரில் அவர்கள் இதை செய்ததாக கூறினார்கள். அதற்கான உத்தரவை காட்டுங்கள் என்று கேட்டேன் ஆனால், அவர்கள் காட்டவில்லை. ஒருவேளை அவர்கள் பிரதமர் அலுலவகத்தின் நன் மதிப்பை கெடுக்க முயன்றிருக்க வேண்டும் அல்லது அவர்களிடம் உத்தரவின் நகல் இல்லாமல் இருந்திருக்க வேண்டும்” என்றும் பிரஹலாத் மோடி கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடப்பது மனித உரிமை மீறல் – மியா காலிஃபா கண்டனம்

விமான நிலையத்தின் உயர் பாதுகாப்பு பகுதியில், நடைமுறையில் உள்ள 144 தடை உத்தரவை மீறியதால், பிரஹலாத் மோடியின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதாகவும், பிறகு அவர்கள் விடுதலை செய்யப்ப்டடதாகவும் இந்தியா டுடே கூறுகிறது.

பிரஹலாத் மோடி, நேற்று (03.02.21) மாலை 4 மணியளவில், இன்டிகோ விமானத்தில், லக்னோ விமான நிலையத்திற்கு வந்ததாகவும், அதன் பிறகு ஒரு மணிநேரம் அங்கு அமர்ந்து போராட்டம் நடத்திய அவர், பிறகு அங்கிருந்து சென்று விட்டதாகவும், விமான நிலையத்தின் கூடுதல் பொது மேலாளர் சௌத்ரி சரண் சிங், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்