காஷ்மீர் பள்ளத்தாக்கில் குடியரசு தின கொண்டாட்டங்கள் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (ஜனவரி 26) மொபைல் போன் இணையச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதேசமயம் கணினிக்கான இணையச் சேவையும், லேண்ட் லைன் தொலைபேசி இணைப்பு சேவையும் தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2005 ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது மொபைல் போனைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நடத்தியதிலிருந்து, பாதுகாப்பு காரணங்களுக்காகக் குடியரசு மற்றும் சுதந்திர தின நாட்களில் மொபைல் போன் மற்றும் இணையச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவது தொடர்ந்து வருகிறது.
Source: The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.