Aran Sei

பாகிஸ்தானில் இந்து கோவில் மீது தாக்குதல் – சிறுபன்மையினர் பாதுகாப்பிற்கே முன்னுரிமை என காவல்துறை அறிவிப்பு

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் பகுதியில் உள்ள இந்துக் கோவிலை இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும், சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும்  தி இந்து செய்தி  வெளியிட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைக் காவல்துறை கட்டுப்படுத்த தவறிய நிலையில், பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் இந்தச் சம்பவத்தைக் கட்டுப்படுத்தியதாகவும் அந்தச் செய்தியில்  கூறப்பட்டுள்ளது.

லாகூரிலிருந்து  59௦ கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரஹிம் யார் கான் மாவட்டத்தின் போங் நகரில் கடந்த ஆகஸ்ட் 4 அன்று இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இந்தப் பகுதியில் இஸ்லாமியர்களும், ஹிந்துக்களும் பல ஆண்டுகளாக அமைதியாக  வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் 8 வயது சிறுவன் இஸ்லாமிய பாடசாலையில் உள்ள நூலகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் , இதனைத் தொடர்ந்து போங் பகுதியில் பரபரப்பானச் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம்குறித்து தெரிவித்துள்ள  நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் குமார் வந்க்வனி,”கோவிலைத் தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உயர் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டதில், நிலைமை மோசமாக உள்ளதை அறிந்தேன்”  என்றும் கூறியுள்ளார்.

மேலும், “உச்சநீதிமன்ற நீதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இந்தச் சமயத்தில் சமூக நல்லிணக்கமுமே தேவை”  என்றும்   ரமேஷ் குமார் வந்க்வனி கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை.

இந்நிலையில், இதுகுறித்து  தெரிவித்துள்ள மாவட்டக் காவல் அதிகாரி ஆசாத் சார்பிரஸ்  , “சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதும், சிறுபன்மையினரை பாதுகாப்பதற்குமே நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலையின் நூலகத்தில்  சிறுநீர் கழித்த அந்த சிறுவனை காவல்துறை அவதூறு சட்டத்தின் கீழ் கைது செய்ததாகவும்,  சிறார் என்பதால் பின்னர் விடுவித்துள்ளதாகவும் தி இந்து செய்தியில்  தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்;

அரசு கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிக்க சட்டம் இயற்ற வேண்டும் – விஸ்வ இந்து பரிஷத் தீர்மானம்

இஸ்லாமிய பெண்களை இழிவுப்படுத்தும் இந்துத்துவ கும்பல்: பெண்கள் அமைப்புகள் கண்டனம்

 ‘மசூதி மனிதன்’ என்றழைக்கப்படும் இந்து கட்டிட கலைஞர் – மத நல்லிணக்கனத்தை தொழிலிலும் வாழ்விலும் காட்டும் கலைஞர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்