Aran Sei

பாஜகவிற்கு தாவிய மநீம செயலாளர் : மநீம விவசாய சட்டங்களை எதிர்த்ததே காரணம்

க்கள் நீதி மய்யத்தின் (மநீம) செயலாளரான ஏ.அருணாச்சலம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவதேகர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சிக்கு மாறியுள்ளார். மத்திய அரசின் விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மையளிப்பவை எனும் கருத்தை மநீம ஏற்காததால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

’நான் ஏ டீம்; ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு சொல்கிறேன் – கமல்ஹாசன் ஆவேசம்

கட்சி மாறியது குறித்து பேசும் போது, தான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்றும்,  “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா , தொலைநோக்கு பார்வையில் புதிய விவசாய சட்டங்களை கொண்டு வந்ததுள்ளனர்” என்றும் அருணாச்சலம் தெரிவித்தார்.

விவசாய சட்டங்களால் விவசாயிகள் நன்மையடையக் கூடாது என்பது மட்டுமே எதிர்க்கட்சிகளின் நோக்கம் என்பதனால் அவர்களோடு சேர்ந்து கொண்டு விவசாய சட்டங்களை எதிர்க்க வேண்டாம் என மநீம தலைவர்களிடம் கேட்டுக் கொண்டதாக அருணாச்சலம் குறிப்பிட்டார்.

எழுவர் விடுதலை : `ஆளுநரின் கையொப்பம் எதற்காகக் காத்திருக்கிறது’ – கமல்ஹாசன்

பாஜகவால் கொண்டு வரப்பட்ட சட்டம் என்று பார்க்காமல், மத்திய அரசு விவசாயிகளின் நன்மைகளுக்காக கொண்டு வந்த சட்டம் என்று பார்க்க வேண்டும் என மநீம மேலிடத்தில் சொல்லிப் பார்த்த பிறகும் கூட, அவர்கள் செவி சாய்க்காததால் வேறு வழியின்றி கட்சியில் இருந்து விலகியதாக அருணாச்சலம் தெரிவித்தார்.

விவசாய சட்டங்கள், தங்கள் வாழ்வாதாரத்தை பாதித்து, விவசாயத் துறையை தனியார் கைக்கு கொண்டு சென்று விடும் என விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்