Aran Sei

‘மக்கள் நீதி மய்யமும் ஒரு திராவிட கட்சிதான்’ – கமல்ஹாசன்

Image Credits: Outlook India

க்கள் நீதி மய்யம் கட்சியும் திராவிட கட்சிதான் என நடிகரும் அக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ் பேசும் அனைவரும் திராவிடர்கள் தான் எனவும் அவர் கூறியுள்ளார்.

பாஜகவிற்கு தாவிய மநீம செயலாளர் : மநீம விவசாய சட்டங்களை எதிர்த்ததே காரணம்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் திருச்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “தமிழகத்தில் தொட்டில் முதல் சுடுகாடு வரை தனித்தனியாக லஞ்சம் பெறுவது தொடர்கிறது. இது லஞ்சப்பட்டியல் தான். அமைச்சர்களின் ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்.

“நாங்கள் 3 வது அணியாக உருவாகிவிட்டோம். எங்கள் தலைமையில் 3 வது அணி இருக்கும் எனத தான் கருதுகிறோம். கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவு செய்யப்படும்” என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

’பொறியியல் கல்வியை காவிமயமாக்குவது முன்னேற்றமல்ல’- கமல்ஹாசனுக்கு பதிலடி

நடிகர் ரஜினி காந்த் உண்மையிலேயே கட்சி தொடங்குவாரா எனும் கேள்விக்குப் பதில் அளித்த அவர், “40  ஆண்டுகால நண்பருக்கு முதலில் உடல்நலம்தான் முக்கியம். உடல்நிலை சரியான பிறகு கட்சி துவங்கும் பணியைத் தொடங்குவார் என்று நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

“மக்கள் நீதி மய்யமும் திராவிட கட்சி தான். தமிழ் பேசும் அனைவரும் திராவிடர்கள் தான்” என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அரண்செய்யுடன் பேசிய சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நே.சிற்றரசு, “கமலத்து அரசியல் இயக்கத்தின் மீதே சந்தேகம் உள்ளது. யார் திராவிடர் யார் தமிழர் என்று கூறுவதற்கு கமல் யார்? அவரே ஒரு சந்தேகத்துக்குரிய நபர். இதனை ஆண்டுக் காலம் நடிகராக இருந்தார், இப்போது அரசியலுக்கு வந்துள்ளார். கிட்டத்தட்ட 100 ஆண்டு காலமாக இந்த நாட்டில் திராவிட இயக்கங்கள் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன. தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தான் பிரதானமாக உள்ளன. திடீரென ஒரு நடிகர் இவ்வாறு கருத்து தெரிவிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை” என்று தெரிவித்தார்.

“மக்கள் நிதி மய்யம் ஒரு திராவிட கட்சியே இல்லை, அது ஒரு போலி அரசியல் கட்சி. போலி மருத்துவர்கள், ஜோதிடர்கள் மட்டும் வாஸ்து பார்ப்பவர்கள் சமூகத்தை ஏமாற்றுவது போல் கமலும் மக்களை ஏமாற்றுகிறார். கமல் ஒரு போலி அரசியல்வாதி” என அவர் விமர்சித்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்